பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாழ்வாங்கு வாழ்தல்

103

அடிப்படை உழைப்பாகிய உழவும் எல்லா மனிதருக்கும் இன்றியமையாத உழைப்பு. உணவில்லாமல் உடல் வளர்ச்சி யடைய முடியாது. அதுபோலவே, இவ்அடிப்படை உழைப்பு இல்லாமல் உடல் நலம் ஏற்படாது. உடலின் உறுப்புக்கள் எல்லாவற்றின் ஒத்த வளர்ச்சிக்கும் உழவு அல்லது தோட்டத் தொழிலைப் போல் சிறந்த உழைப்பு வேறு எதுவும் இல்லை. வயல்களில் பயிர் வகைகளை உண்டுபண்ணும் உழவரா யிராதவருக்காகவே காய்கறிகனிகள், மலர்கள் ஆகியவற்றை உண்டுபண்ணும் தொழில் தோட்ட வாய்ப்பை இயற்கை அளித்துள்ளது எனலாம்.

எனவே தத்தம் உணவுக்காக உழைக்கும் திறமையை எல்லாரும் பெற்றிருக்க வேண்டும். அது அவர்கள் வாழ்க்கைப் பயிற்சி அல்லது கல்வியின் ஒரு பகுதி."

உழைப்பையும் உழவையும் பற்றிய இவ் அறிவுரை களுக்குப் பின் ஆசிரியர் டாமியைநோக்கி “நானும் என் மாணவன் ஹாரியும் எங்கள் சிறுபங்குக்கு நாள்தோறும் காலையில் நிலம் பண்படுத்த உழைக்கிறோம். அதற்காக இத்தோட்டத்தில் எனக்கெனத் தனி நிலப்பகுதி வகுக்கப்பட்டிருக்கிறது. ஹாரிக்கும் அப்படியே, உனக்கும் இன்று ஒரு பகுதி வகுத்துத் தருகிறேன். நாங்கள் உழைக்கும் நேரத்தை நீயும் வீணாக்காமல், நீயும் அதில் உழைக்கப் பழகிக்கொள்ளலாம். இதன் மூலம் எங்களைப்போல் நீயும் தனக்கும் பிறருக்கும் பயன்படும் உழைப்புடையவனாகலாம் அல்லவா?” என்றார்.

டாமி

பயன்படும் உழைப்பு எதனையும் நான் செய்ய வேண்டியதுமில்லை, செய்யப் போவதுமில்லை. நான் உயர் குடியாளன். எனக்கு நிறை செல்வமுண்டு. நான் ஏன் குடியான வனைப்போல ஏரும் கலப்பையும் பிடிக்கவேண்டும்? ஆகவே எனக்கு நீங்கள் நிலப்பகுதி வகுக்க வேண்டாம்.

திரு பார்லோ

அது உன் விருப்பம். நாங்கள் வேலை செய்யும் நேரத்தை நீ வேறு எவ்வழியிலாவது போக்கிக் கொள்ளலாம்.