பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




108 ||

அப்பாத்துரையம் - 28

தானும் உண்டு. தன்னையொத்தவர்க்கும் உதவி செய்து கவலை யற்று வாழ்ந்துவந்தான். அவன் இனிய பாடல்கள் பாடிக் கொண்டு இன்பமாய்த் தொழில் செய்வது வழக்கம். அவனைச் சிறுவர் முதல் பெரியவர் வரை ஊர்மக்கள் யாவருமே நேசித்தனர்.

செல்வன் ஒருநாள் தன் சிவிகையில் ஏறிச் செல்லு கையில் கூடை முடைபவன் குடிலருகாகச் சென்றான். கூடை முடைபவன் தன் வாயிலில் பாடிக் கொண்டே கவலை யற்றிருப்பது கண்டான். பஞ்சணை மெத்தையிலும் சிவிகை யிலும் அமர்ந்தும் உறக்கம்வராது கவலைப்படும் தன் வாழ்வை அவன் எண்ணிப் பார்த்தான். தன்னிடமில்லாத அமைதி இவ் வேழையிடமிருப்பது காண அவனுக்குப் பொறுக்கவில்லை. தன் மாளிகையைச் சார்ந்த புறவெளியில் விதையாமல் பயிரிடாமல் காடாய் வளரும் சூரல்களே அவன் கவலையற்ற வாழ்வுக்குக் காரணம் என்பதை அவன் எண்ணியபோது அவன் சீற்றம் இன்னும் வளர்ந்தது. அன்றிரவே அவன் தன் பணியாட்களை ஏவி அச்சூரல் காட்டில் தீயிடும்படி கூறினான். நெருங்கி வளர்ந்திருந்த சூரல்கள் ஒன்றையொன்று பற்றி எரியவே, தீ எங்கும் பரவிக் கூடை முடைபவனுக்கு வேண்டும் சூரல் காட்டை மட்டு மின்றி அதனை அடுத்த அவன் குடிலையும் எரித்துச் சாம்பராக்கிற்று. அவன் பிழைத்து வெளியேறுவதே அரும்பாடாயிற்று.

பிழைத்துவந்தும் கூடை முடைவோனுக்கு ஏன் பிழைத்து வந்தோம் என்றாயிற்று. ஏனென்றால் அவன் பிழைப்புக்கு மூலப்பொருளான சூரல் காடு முழுவதும் சாம்பராய்ப் போயிற்று. வாழ்க்கைக்கு வகையற்ற நிலையில் அவன் அவ்வூர் ஆட்சித் தலைவனிடம் சென்று முறையிட்டான். ஆட்சித் தலைவன் செல்வனை வருவித்து உசாவினான். அவனுக்கும் செல்வன் செயல் மன்னிக்க முடியாத பெருங் குற்றமாகவே பட்டது. அவனைத் தண்டிக்குமுன் அவன் குற்றத்தை அவன் மனதறிய விளக்கி அவனுக்கு ஒரு படிப்பினை கற்பிக்க வேண்டுமென்று எண்ணினான்.

இந்நோக்கத்துடன் ஆட்சித் தலைவன் இருவரையும் ஒரு மரக்கலத்திலிட்டனுப்புவித்துத் தொலை தூரத் தீவொன்றில் விட்டுவரும்படி கட்டளையிட்டான். அத்தீவில் நாகரிகமற்ற