பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாழ்வாங்கு வாழ்தல்

111

செல்வன் அவன் பெருந்தன்மையைக் கண்டு முற்றிலும் மனமாறித் 'தலைவன் தண்டனையாக உனக்கு மாற்றிய பாதிச் செல்வம் மட்டுமல்ல, முழுச் செல்வத்தையுமே என்னுடனிருந்து ஆண்டு நடத்த நான் என் தோழனாகிய இம் முதியோனை ம் அழைக்கிறேன். என் செல்வம் அப்போது ஏழைகள் யாவருக்கும் நற்பயன் தந்து எனக்கும் புகழ்தரும்' என்றான்.

முதியவன் உதவியால் செல்வன் பண்பு மாறி ஏழை கட்குப் பல உதவிகள் செய்து வாழ்ந்தான்.

கதை வாசித்து முடிந்தது. கதையை டாமி மை கொட்டாது ஆர்வத்துடன் கேட்டிருந்தான். முடிவில் அவன் சிரியரை நோக்கி "ஏடுகளில் இவ்வளவு இன்பகரமான கதைகள் இருக்குமென்று இதுவரை எனக்குத் தெரியாது. இக் கதையும் இதில்வரும் கூடைமுடைவோன் குணமும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஆனால் செல்வன் கீழிருந்து முழுச் செல்வத்தையும் மேற்பார்ப்பதை விட, தனக்கென அவன் செல்வத்திற் பாதியைப் பெற்றிருந்தால் அது அறிவுடைய செயலாயிருக்கும்” என்றான்.

டாமி புறத்தே வகுப்பு இறுமாப்புக்களால் கெட்டாலும் அகத்தே ஆராய்ச்சிப் பண்புடையவனாகவே இருக்கிறான் என்றும்; அவன் வாழ்க்கை யார்வம் அற்றவனல்லன் என்றும் கண்டு ஆசிரியர் உள்ளூர மகிழ்ச்சியடைந்தார். பின் அவர் “கதை பற்றிய உன் கருத்துக்கள் பொதுவாக ஏற்கத்தக்கவையே. ஆனால் இறுதியில் நீ கூறியது முற்றிலும் சரியல்ல. கூடைமுடை வோன் விரும்பியது செல்வத்தை யல்ல; பிறருக்குச் செல்வத்தைப் பயன்படுத்துவதையே. ஆகவே தனக்கெனப் பெறும் செல்வத்துக்கும் தன் வழியில் விட்ட செல்வத்துக்கும் அவனைப் போன்றவர்க்கு வேற்றுமை இராது. எடுத்துக்காட்டாக உனக்கென உனக்குச் செல்வம் இருப்பதற்கும் உன் தந்தையின் செல்வத்தை நீ நுகர்வதற்கும் என்ன வேற்றுமை இருக்க முடியும்?” என்றார்.