பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாழ்வாங்கு வாழ்தல்

113

தோட்டவேலை முடிந்து இருவரும் நூலகம் வந்து சேர்ந்தனர். டாமி தன் கதை கேட்கும் ஆர்வத்தை அடக்க முடியவில்லை. கொஞ்ச நேரம் வாளா இருந்தபின் அவன் ஆசிரியரிடம், “இன்று கதை வாசிக்க ஹாரி இல்லை. எனக்குக் கதை வாசிக்கத் தெரியாது. நீங்களே ஒரு கதை வாசித்துக் காட்டுவீர்களா?" என்றான். ஆனால் ஆசிரியரோ “தானாக வாசிக்க முயலாதவர்களுக்கு நான் வாசிப்பதில்லை. மேலும் எனக்கு வேறு வேலையிருக்கிறது” என்று கூறிவிட்டார்.

ஹாரிக்கு நூலகத்தில் நேரமும் போகவில்லை. என்றும் விதிர்விதிர்ப்புடன் எதிர்பார்த்திருக்கும் அந்நன்னேரத்தை அவன் கழிப்பதே அருமையாய்விட்டது. 'நாம் கதை கேட்பதில் மட்டும் ஈடுபட்டிருந்து அதை வாசிக்கப் பழகாமலிருந்தது தவறு. பழகியிருந்தால் இப்போது யாரையும் எதிர்பாராமல் விரும்பிய கதையை வாசிக்கலாமே' என்று அவன் எண்ணினான்.

ஹாரியின் ஓய்வு நாட்கள் ஐந்தும் கழிந்து அவன் வந்தபின் மீண்டும் கதை வாசிப்புத் தொடங்கிற்று. டாமி இப்போதும் முன்போலவே ஆர்வத்துடன் கதை கேட்டு மகிழ்ந்தான். ஆனால் இப்போது அவன் அத்துடன் நிற்கவில்லை. தன் விளையாட்டு நேரத்தில் அவன் ஹாரியிடம் நயமாக "ஹாரி, எனக்கு உன்னைப் போல் கதை வாசிக்கப் பழகிக்கொள்ள வேண்டும் என்று ஆவலாய் இருக்கிறது. ஆகவே நீ அதை எப்படிக் கற்றாய் என்று அறிய விரும்புகிறேன்” என்றான்.

ஹாரி

இது என்ன பெருத்த கேள்வி! நான் இங்கே வருவதே படிப்பதற்குத் தானே. ஆசிரியரிடமும் முதலிலிருந்தே எழுத்தும் வாசிப்பும் கற்றுக் கொண்டேன்.

டாமி

ஆம்,இப்போது எனக்கு நினைவு வருகிறது. நான் வந்தவுடன் ஆசிரியர் நீ எழுத வாசிக்கப் படிக்க வேண்டாமா?' என்று கேட்டார்.ஆனால் தொழிலாளர் வகுப்பினர்தான் வேலை பழக வேண்டியது என்று நான் எண்ணியது போலவே, கணக்கர் வகுப்புத்தான் வாசிக்கவும் எழுதவும் பழகிக் கொள்ள வேண்டும்