பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(116) ||

அப்பாத்துரையம் - 28

ஆனால் ஓநாய் அவன் மேல் விழுமுன் பின்னால் தொலைவில் வந்து கொண்டிருந்த கீப்பர் பாய்ந்தோடிவந்து ஓநாயின்மீது தாக்கிற்று. நாய் இனத்து நாட்டு விலங்கும் காட்டு விலங்கும் நெடுநேரம் மூர்க்கமாகப் போராடின. ஓநாயின் முரட்டுத் தாக்குதலைக் கீப்பர் நெடுநேரம் திறமையாகத் தட்டிக் கழித்துக் கொண்டு அதனை நாற்புறமும் திக்கு முக்காடச் செய்தது. இறுதியில் அது சளைத்தது கவனித்து அதன் தொண்டையைக் கடித்துக் கொன்று வீழ்த்தியது.

ஓநாயினால் ஏற்பட்ட காயங்களுடன், ஓநாயின் குருதி யுடன் தன் குருதியும் தோய்ந்து அம் முரட்டு நாய் இறுமாப் புடன் ஓநாய் உடல்மீது கால்வைத்து நின்று செல்வனை நோக்கி வால் குழைத்தது. அதன் நயநாகரிக மற்ற தோற்றத்தை இப்போது செல்வன் வெறுக்கவில்லை. அதுவே தன் உயிரைக் காத்தளித்த தோழன் என்பதை அவன் உணர்ந்தான். அதுமுதல் அவன் அதனை வளர்த்த குடியானவனுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் தரும் நிலபுலன் கொடுத்து அந்நாயையும் நன்கு வளர்க்கும்படி ஊக்குவித்தான்.