பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




8. குடிப்பெருமையின் குலைவு

L

டாமி மெர்ட்டன் பார்லோவின் இல்லத்தின் புதிய சூழ்நிலையில் மிக விரைவாக முன்னேறி வந்தான். அவன் இயற்கையிலேயே கெட்ட பையனல்லன். உண்மையில் எவரும் இயற்கையில் கெட்டவராய் இருப்பதுமில்லை. பிள்ளைகள் நல்லவராவதும் கெட்டவராவதும் வீட்டுச் சூழ்நிலை காரணமாகவும், வீட்டையடுத்த அயல் சூழல் நிலைகளின் காரணமாகவுமே. டாமிக்கு அவன் செல்வக் குடியும் அவன் உயர் வகுப்பும் பல செயற்கைச் சூழ்நிலைகளை உண்டு பண்ணிக் கெட்ட கருத்துக்கள், கெட்ட பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை உண்டு பண்ணியிருந்தது. 'பழக்கமென்பது பின்பிறந்த இயற்கை" என்ற பழமொழிக்கிணங்க, அவன் பழக்கவழக்கங்கள் அவன் இயற்கையியல்பை மறைத்துப் புறத்தோடுபோல் அதனை மூடியிருந்தது. பார்லோவின் கல்வி முறையின் பெரும்பகுதி இச்செயற்கைத் தோட்டை உடைத்தெறிந்து அவன் உள்ளார்ந்த இயற்கை இயல்பு தடையின்றி வளர விடுவதாகவே இருந்தது.

தானே உழைத்தல், உழைத்தபின் பசித்துண்டல், வாசித்தல் ஆகியவற்றை அவன் மேற்கொண்ட பின்னும் அவனது குடிப்பெருமையும் இறுமாப்பும் அவனைவிட்டு அகலவில்லை. பிற வகுப்பினரும் அடிமைகளும் இழிவானவர்கள் என்றும் அவர்கள் தமக்கு ஊழியம் செய்யவே பிறந்தவர்கள் என்றும் அவன் கருதினான். எனவே எந்த வேலையையும் தான் செய்யாமல் அவர்களையே அதட்டி வேலை வாங்கும் பண்பு அவனை விட்டு நீங்க நெடுநாளாயிற்று. ஹாரி வெளியே போயிருந்த நாட்களில் ஒரு நாள் அவனுக்கு நேர்ந்த நிகழ்ச்சி இப்பெருமைக்குப் பேரூறு விளைத்து அவன் திருந்துவதற்கு வழிகாட்டுவதாயிருந்தது.

டாமி அன்று பந்துமட்டையெடுத்துப் பந்தாடிக் கொண்டிருந்தான். பந்து துள்ளியோடி வேலிக்கு அப்பால்