பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(118) ||

அப்பாத்துரையம் - 28

சென்றுவிட்டது. அவனுடைய இயற்கைச் சோம்பல் அவனை அதைப்போய் எடுப்பதற்குத் தயங்கச் செய்தது. அவன் அவ்வழியே பார்த்துக் கொண்டிருக்கையில் கிழிந்த அரைகுறைக் கந்தலாடையுடுத்த ஒரு ஏழைச் சிறுவன் அவ்வழி வந்து கொண் டிருந்தான். டாமி அவனை நோக்கி அப்பந்தை எடுத்துப்போடு என்று கூறினான். அவன் கவனியாது செல்வதுகண்டு பின்னும் உரத்தகுரலில் அதட்டிக் கூறினான். அப்போதும் அவன் அசட்டையாய்ச் செல்லவே, டாமி கடுஞ் சினங்கொண்டு"அடே மடையா, உனக்குக் காதென்ன செவிடா? பந்தை எடுத்துப் போடு என்று கத்துகிறேன். பேசாமல் ஏன் போகிறாய்?” என்று கூவினான்.

சிறுவன் அவனைச் சற்றே ஏறெடுத்துப் பார்த்து "எனக்குக் காது கேட்காமலில்லை. நான் செவிடனுமல்ல. ஆனால் நீ கழுதை போற் கத்துவதை நான் கவனித்து என்ன ஆக வேண்டும்? என்னால் எடுத்துத்தர முடியாது. நீ வேண்டுமானால் போய் எடுத்துக்கொள். உன்கால் என்ன நொண்டியா?” என்றான்.

ஏழைப்பையன், கந்தலாடை யுடுத்தவன் தன்னை மீறுவதுடன் தன்னை அசட்டை செய்து அவமதிப்பாகவும் பேசினது காண, டாமியின் உடலின் குருதி கொதித்தது. அவன் ஒவ்வொரு தசையும் துடித்தது. அவன் அச்சிறுவனைச் சென்று நன்றாய் அடித்து நொறுக்க வேண்டுமென்று ஆத்திரம் கொண்டு வேலியேறிக் குதித்தான். ஆனால் வேலியின் மறுபுறம் என்ன இருக்கிறது என்று பாராமல் வேகமாகத் தாவியதால் அங்குள்ள ஒரு பன்றிக் குட்டையில் போய் விழுந்தான்.

அக்குட்டையில் நீர் கால்பங்கும் சேறு முக்காற் பங்கும் இருந்தது. விழும் வேகத்திலேயே அவன் காற் புதையல்கள் நழுவியோடின.காற் சட்டையும் உடுப்புமாக மார்பளவுக்கு அவன் சேற்றில் தோய்ந்தான். எவ்வளவு முயன்றும் வெளியேற முடியாமல் அவன் அதில் மேன்மேலும் அழுந்தி வந்தான். அவன் இரங்கத் தக்க நிலையைக் கண்டு சிறுவன் தன்னை அவன் அவமதித்ததையும் மறந்து அவனைத் தூக்கி விட்டான். அவமதிப் பாலும் வெட்கத்தாலும் அவன் அச்சிறுவனை முகம்பார்க்கக்