பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




122

||-

அப்பாத்துரையம் - 28

பிறந்தவர்கள் என்றோ, நீங்கள் உத்தரவிட்டதற்காகவே உழைக்க வேண்டியவர்கள் என்றோ எப்படி கூறமுடியும்? அவர்கட்குப் பிடிக்காவிட்டால் அவர்கள் வேலையை விட்டு நீங்கலாம் அல்லவா?

இதுமட்டுமன்று. வீடு குடி தோட்டம் துறவு இருப்பத னாலேயே நீங்கள் ஏவப்பிறந்தவர்களானால் இவையெல்லாம் இல்லாதபோது உன்னை ஒருவர் அதட்ட நீ பொறுப்பாயா?

டாமி

நான் கூறியது தவறு என்று பெரிதும் விளங்கிவிட்டது. ஆனால் பணம் வாங்காமலே ஜமெய்க்காவிலும் இங்கும் எங்கள் வீட்டில் அடிமைக் கறுப்பர்களான நீகிரோக்கள் வேலை செய்கிறார்களே! அவர்களை அடிப்பதும் அடியாமலிருப்பதும், உணவு கொடுப்பதும் கொடுக்காமலிருப்பதும், அவர்கள் வாழ்வும் தாழ்வும் முற்றிலும் எங்கள் வசத்திலேயே இருக்கிறதே! ஹாரி

ஆம், ஆடுமாடுகளையும் குதிரைகளையும் அவற்றின் விருப்பு வெறுப்பைப் பாராமல் மனிதர் பிடித்தடக்கிப் பயன் படுத்துவது போலப் பலர் இக் கறுப்பரையும் அடிமைகளாக்கி இருக்கிறார்கள். இது ஒரு கொடிய பழக்கம். அறிவுடையோர் இதனைக் கண்டித்து வருகின்றனர். அவ்வகுப்பினரிடையே கல்வியும் செல்வமும் பெருக்க முற்று அவ்வகுப்பறிஞர் அவர்கள் கொடுமைகளை நீக்கப்பாடுபடும் நம்மவரிடையே கூட நல்லறிஞர்கள் அவற்றைக் கண்டித்து ஒழிக்க முன் வருகின்றனர்.

டாமி

நீ கூறிய உவமைப்படியே இவர்கள் ஆடு மாடுகள், குதிரைகள் நிலையில் இருந்தால் நாம் அவர்களை அடிமைப் படுத்துவதில் தவறென்ன? விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் வேறுபாடுகள் இருப்பதுபோலத் தானே அவர்களுக்கும் நமக்கும் டையில் இருக்கின்றன?