பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




124

டாமி

அப்பாத்துரையம் - 28

நாகரிகமற்ற நீகிரோவர்களிடையிலிருந்தும் பிறரிட மிருந்தும்தான் வெள்ளையர் நாகரிகம் பெற்றனர் என்ற உன் கூற்று எனக்கு வியப்பைத் தருகிறது.

ஹாரி

ஆம், நாம் அதைப் பெரும்பாலும் எண்ணிப் பார்ப்ப தில்லை. ஆசிரியர் உலக நாகரிகம் பற்றிப் போதித்திருப்ப தனால் எனக்கு ஓரளவு இது தெரியவந்தது. இவைபற்றி அவர் இன்னும் விரிவாகக் கூறக்கூடும். கறுப்பராகிய நீகிரோவர் மட்டுமல்ல, சிகப்பராகிய அமெரிக்க இந்தியரும், மஞ்சள் நிறத்தவராகிய சீனரும், கருந் தவிட்டு நிறத்தவராகிய இந்தியரும் வெள்ளையருக்கு மிக முற்பட்ட, மேம்பட்ட நாகரிகமுடையவர்கள்.

டாமி

என் தற்பெருமையை அடிப்படையிலிருந்தே கல்லி எறியப் போதிய செய்திகளை இன்று உன்னால் அறிந்தேன். தற்பெருமை, குடிப்பெருமை, வகுப்புப் பெருமை, இனப்பெருமை ஆகிய யாவும் ஒழுக்கமுறையில் தீயவைமட்டுமன்று, வரலாற்றறிவுக்கும் மாறானவை என்று கண்டு கொண்டேன். இனி எல்லாரும் ஓர் குலம், எல்லாரும் ஓர் குடி, எல்லாரும் ஒரே இறைவன் மக்கள் என்ற அன்பு நெறிப்படியே நடப்பேன்.

டாமியின் மனமாற்றம் நன்கு தொடங்கியது கண்டு ஹாரி மகிழ்ந்தான். ஹாரி மூலம் இதைக் கேள்விப்பட்ட ஆசிரியரும் பூரிப்படைந்தார்.