பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




128

||-

அப்பாத்துரையம் - 28

அன்ட்ராக்ளிஸ் கதை கேட்டு அனைவரும் வியப் படைந்தனர். அவனுக்கு அவர்கள் விடுதலை அளித்து அச்சிங்கத்தையும் பரிசளித்தனர். சிங்கமும் அவனிடம் உடன் பிறந்தான்போல் நடந்து கொண்டது.

அன்ட்ராக்ளிஸ், சிங்கம் ஆகிய இருவரிடை உள்ள நட்புப் பற்றிய இக்கதை டாமிக்கு மிகவும் வியப்பை உண்டாக்கிய துடன் உயிர்களிடத்து உள்ளார்ந்த பாசம், அடிமைகளிடத்துப் பரிவு ஆகிய குணங்களை உண்டு பண்ண உதவிற்று.

இக்கதை முடிந்தவுடன் அவன் ஆசிரியரிடம் “இது இனிய கதையேயாயினும் பொருத்தமற்ற கதையென்றே நினைக்கிறேன். சிங்கம், புலி இயற்கையிலேயே கொடியவையல்லவா? அவை எப்படி நன்றிக்குக் கட்டுப்பட்டு மனிதனிடம் அன்பு கொள்ளக் கூடும்?" என்று கேட்டான்.

66

"சிங்கம், புலி முதலியவைகள் உயிரினங்களைக் கொன்று அவற்றின் ஊனையே தின்பவை. அவை உயிர்களைக் கொல்வது கொடுமையாலன்று; பசியாற்றிக் கொள்வதற்காகவே. பசி யில்லாத போது இவை இரை தேடுவதுமில்லை. கொல்வது மில்லை. பாம்பு முதலிய வேறு உயிர்கள் அச்சத்தால் கொல்லுகின்றனவேயொழியத் தின்பதற்காகக்கூட அல்ல. உண்மையில் ஊனுண்ணாதவையாயிருந்தும் கொன்றழிக்கும் காட்டானையைவிட இவை கொடியவையல்ல. உணவுக்காகக் கூட இல்லாமல், யானையைப் போலக் கொலை, துன்பம் பற்றிய எண்ணமில்லா அறியாமைகூட இல்லாமல், மனிதன் கொலை, வஞ்சகம், அடக்குமுறை ஆகியவற்றைச் செய்து வாழ்கிறான். அறிவுடன் கூடிய இம்மனிதனிடம் மட்டும் தான் தன் இனத்தவரையே அடிமையாக நடத்தும் பழக்கம் உண்டு. மனிதர் மீதேறி மனிதர் செல்வதுபோல், மனிதர் உழைப்பால் மனிதர் வாழ்வதுபோல் எந்த விலங்கும் எங்காவது வாழ்வதுண்டா?” என்று ஆசிரியர் கேட்டார்.

அடிமைத்தனத்தை ஆதரித்தல், வேலையாட்களை அடக்கியாளுதல் ஆகியவை பற்றிய டாமியின் பல ஐயங்கள் இப்போது அகன்று வந்தன.