பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(130 II.

அப்பாத்துரையம் - 28

சிறுவன் “நான் அவ்வளவு சிறப்பாக எதுவும் உனக்குச் செய்துவிடவில்லை. இடையூறு நேர்ந்தபோது பகைவருக்குக் கூட உதவாதிருக்க முடியாதே! அதுபோல நீயும் உன் நிலையிலுள்ள சிறுவர் என் நிலையிலுள்ள சிறுவரிடம் செய்யாத எதனையும் செய்துவிடவில்லை. ஆயினும் நீ என்னைப் பொருட்படுத்தி என்னிடம் வந்து அன்பாகப் பேசியது கண்டு நான் மகிழ்ச்சி யடைகிறேன்" என்றான்.

சிறுவன் நட்புணர்ச்சியும் கனிந்த சொல்லும் டாமிக்கு அவன்மீது பின்னும் கனிவூட்டின. அவன் "உன்னிடம் நான் இன்னும் நன்கு பழகிக்கொள்ளவே விரும்புகிறேன். என்னை இனி உன் நண்பனாகவும் தோழனாகவும் கருதிக்கொள்” என்றான்.

சிறுவன்

உன் சொற்கள் எனக்கு மிகவும் பெருமை தருகின்றன. என் வயதையொத்த உன் போன்ற சிறுவருடன் நட்புக் கொள்வதில் எனக்குப் பேரவா உண்டு. ஆனால் அதற்கான நேரமும் வாய்ப்பும் எனக்கேது?

டாமி இது கேட்டு மனம் வருந்தினான். ஏழைகள் வாய்ப் பின்மை, அவர்கள் அவதிகள் ஆகியவைப்பற்றி அவன் கேள்விப் பட்டாலும், அவற்றை அவன் தெளிவாக இன்னும் அறிந்து கொள்ளவில்லை. நினைத்தபடி ஆடை, அணி மணி, சிற்றுண்டி கிடையாததே வறுமை என்பது மட்டும் தான் அவனுக்குத் தெரியும். சிறுவன் நிலையறிந்து உதவும் எண்ணத்துடன் அவனைப் புண்படுத்தாமலே அவனுடன் அதனைப்பற்றி உசாவினான்.

'இந்த வயதில் நேரமில்லாமல் போக உனக்கு அப்படி என்ன வேலை?' என்று கேட்டான்.

இக்கேள்வியே அவன் முகத்தின் களையை விரட்டிக்கண் கனிய வைத்தது. ஆயினும் அவன் தன்னைச் சமாளித்துக் கொண்டு “என் கந்தலாடையே ஓரளவு இதற்கு விடை தரும். இதுபோன்ற கந்தலாடை கூட மிகுதியில்லாமல் என்னுடன் சேர்ந்து ஏழு ஆண்களும் இரண்டு பெண்களும் உடன் பிறந்தவர் களாய் உள்ளனர். இத்தனை பேருக்கும் தாய் தந்தையருக்கும்