பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அப்பாத்துரையம் - 28

132) ||__ மன்னிப்புக் கோரியதும் போற்றத்தக்க நற்செயல்கள். அவனுக்கு உதவிசெய்ய எண்ணியது இன்னும் பாராட்டத்தக்கதே. ஆனால் அவ்வுதவி செய்யும் பண்பில் சில குறைகள் விட்டு வைத்திருக் கிறாய். உன் ஆடைகளைக் கொடுக்க உனக்கு உரிமையுண்டு. அவை உன்னவை. ஆனால் என்னுடைமையான அப்பத்தை நீ என்னைக் கோராமல் கொடுத்திருக்கக் கூடாது. அத்துடன் உன் ஆடைகளை அவனுக்குக் கொடுப்பது பொருத்தமானதா என்பதை நீ எண்ணியிருக்க வேண்டும். அவனுக்கேற்ற ஆடைகள் வாங்கிக் கொடுத்திருந்தால், உன் ஆட்களை விட அது அவனுக்கு நலம் செய்திருக்கும். அவை மதிப்புக் குறைவாயினும் அவன் வாழ்க்கைக்குப் பொருத்தமாயிருக்கும்" என்றார்.

டாமி ஆசிரியர் உடைமையை எடுத்துக் கொடுத்த தற்காக ஆசிரியரிடம் உடனே மன்னிப்புக் கோரினான். ஆனால் தன் ஆடையைக் கொடுப்பதில் என்ன பொருத்தக் குறைவு என்று கேட்டான்.

L

ஆசிரியர் மறுமொழி கூறாமலே நகைத்தார். அவர் மறுமொழி கூறவேண்டிய தேவை ஏற்படாமலே டாமிக்கு அது விளங்கத்தக்க ஒரு காட்சியை அவன் அப்போது கண்டான். அவர்கள் பேச்சுக்கிடையே சிறுவன் கலவரத்துடன் ஓடிவந்து L டாமியின் ஆடைகளை ஒரு மூட்டையாகச் சுருட்டி அவனிடமே கொடுத்து, “எனக்கு இவ்வாடைகள் வேண்டாம். அதை அன்பு கூர்ந்து திரும்பப் பெற்றுக்கொள்” என்றான்.

சிறுவன் முகம் சீறியிருந்தது. கண்கள் கன்னிக் கலக்க முற்றிருந்தன. கன்னங்களில் யாரோ கைத்தடம் தெரியும்படி அடித்து வீங்கியிருந்தது. டாமி அவனை நோக்கி, “தம்பி, ஏன் ஆடைகளை வேண்டாம் என்று மறுக்கிறாய்? ஏன் உன்முகம் இப்படியிருக்கிறது?" என்று கேட்டான்.

"உன் ஆடைகளால் தான் நான் தொல்லைக்காளாய் இவ்வடிகளும் பட்டேன். இவற்றை உடுத்து நான் வெளியே போனதும் அவை பட்டாடையானதால் பலரும் இதை நீ எங்கே திருடினாய் என்று கேட்டு என்னை அவமானப்படுத்துகிறார்கள். மேலும் போகிற இடங்களிலெல்லாம் என் நண்பர்களும் பிற சிறுவர் சிறுமியரும் என்னை எள்ளி நகையாடுகிறார்கள். சிலரை நான் மறுத்துரைத்து அதனால் ஏற்பட்ட கைகலப்பில் நான்