பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாழ்வாங்கு வாழ்தல்

137

பாராட்டி "உனக்குச் செய்த தீமைக்கு இவன் நாளடைவில் துன்பம் அடைவது உறுதி. 'வல்லானுக்கு வல்லான் வையத்தி லுண்டு' என்பதை இவன் கவனிக்கவில்லை. வருங்காலத்தில் இது போன்றவரைக் கண்டிக்கும் ஆற்றல் உன் போன்ற அறிவாளி களுக்குக் கட்டாயம் வரும்” என்று ஆறுதலளித்துச் சென்றான்.

டாமி இவ்வளவு நிகழ்ச்சிகளிடையேயும் திகைத்து நின்றிருந்தான். அவன் இப்போது ஹாரியை நோக்கி "நீ கூறியபடியே அப்பெருமகன் நடந்து கொண்டான். நீ அவன் கையில் பட்டுத்துடிப்பதைக் காண எனக்குப் பொறுக்க வில்லை. ஆனால் எனக்கும் எனக்கும் இன்னது செய்வதென்று தெரியவில்லை. நேர்மைக்கு அஞ்சுவதைவிட இக்கொடுஞ் செயலாளர் செல்வத்துக்கு அஞ்சுகிறார்கள் என்பதை மட்டும் காண்கிறேன். இத்தகையோரிடம் நீ இவ்வளவு உண்மை கூறி எதிர்த்துக் கொண்டிருக்க வேண்டாம் அல்லவா? ‘முயலை நான் காணவேயில்லை' என்று கூறித் தப்பியிருக்கலாமே” என்றான்.

ஹாரி

அது ஓரளவு சரியே; இத்தகையோரிடம் பொய் கூறுவது கூடத் தவறல்ல என்பதையும் நான் அறிவேன். ஆனால் துன்பத்துக்கஞ்சிப் பொய் கூறுவது கோழைத்தனம். அது தீமையை மென்மேலும் வளர்க்கும். இப்போது மெய் கூறி நான் துன்பமடைந்தாலும் அத்துன்பம் வீண்போகாது.ஏழை துன்பத்துக்கஞ்சி அடிமைப்படமாட்டான் என்ற நிலையை அது வளர்க்கும்.

டாமி

உன்னைப் போன்ற எத்தனைபேர் துன்பப்பட்டு இத்தொல்லை நீங்க வேண்டுமோ! என்னைக் கேட்டால் இத்தீமைகளைக் கூடும்போது வன்மையாகக் கண்டித்து ஒழிக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். என் கையில் இன்று துப்பாக்கியிருந்திருந்தால் இப்பெருமகனைச் சுட்டொழித்

திருப்பேன்.