பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




13. மண்ணுயிர் பேணல்

ரு பார்லோவின் வாழ்க்கைப் பயிற்சிக் கல்வி ஹாரியை எப்படித் திருத்திற்றோ, அதே வகையில் டாமியையும் மிக விரைவாகவே திருத்திற்று. இருவருடைய வேறுபட்ட குடும்பச் சூழ்நிலைகள் இப்பயிற்சி முறையின் வெற்றியில் சி மிகுதி வேறுபடவில்லையாயினும், ஹாரியின் குடும்பச் சூழ்நிலை அவனுக்கு உலக அனுபவத்தையும் திறத்தையும் தந்திருந்தது. டாமியிடம் இப்பயிற்சி அதனைப் புதிதாகத் திடீரென்று உண்டுபண்ண முடியவில்லை. திரு பார்லோவின் பயிற்சிப் பண்புகளுள் ஒரு பண்புவகையில் அவன் செய்த தவறுகளும் கோமாளிக் கூத்துக்களும் இதனை வலியுறுத்தின.

ஹாரி ஒரு நாள் ஒரு பருந்தின் பிடியுட்பட்ட கோழிக் குஞ்சை ஆசிரியரிணக்கம் பெற்றுப் பருந்தைத் துரத்திவிட்டு எடுத்து வளர்த்துவந்தான். தோட்டத்திலுள்ள பறவைகளிடம் அவன் அன்பாக நடந்து அவற்றின் நண்பனாகவும் விளங்கினான். ஆசிரியர் இச்செயல்களைப் போற்றி ஆதரித்ததுடன் உயிர் களிடத்து அன்புகாட்டுவதன் அவசியம் பற்றியும் அடிக்கடி பேசினார். முரட்டு இயல்புடைய விலங்குகள்கூட அன்பாக நடத்தப்பட்டால் பண்பு மாறி நட்புக்கொள்ளுவ துண்டு என்றும் பல கதைகள் வாயிலாக விளக்கினார். அத்துடன் மனிதன் மிகப் பழங்காலத்தில் இங்ஙனம் அன்பு பூண்டு பழக்கிய விலங்குகளே நாயும் பூனையும் கீரியும் என்பதையும், இவற்றின் இனங்களாகிய ஓநாய், காட்டுப்பூனை முதலிய விலங்குகள் இன்னும் கொடுவிலங்குகளாகவே உள்ளன என்பதையும் அவர் விளக்கினார். இவற்றைக்கேட்ட டாமிக்குத் தானும் அவ்வழியில் நின்று விலங்குகளைப் பழக்க வேண்டும் என்ற ஆவல் பிறந்தது.

L