பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாழ்வாங்கு வாழ்தல்

147

நடவடிக்கை எடுப்பதற்காகத் திரு ரிச்சர்டு கிரஃப் பெற்ற உத்தரவுப் பத்திரம் இது. வட்டியுடனும் செலவு தொகையுடனும் உங்கள் கணவன் இதை உடனடியாகக் கொடுக்காவிட்டால், உங்கள் உடைமைகள் யாவற்றையும் கைப்பற்றி அவற்றை ஏலத்திலிட வேண்டி வரும்" என்றான்.

மாது

எங்களுக்குக் கடன் எதுவும் கிடையாது. இதில் ஏதோ தவறு இருக்க வேண்டும். மேலும் திரு ரிச்சர்டு கிரஃப் என்ற பெயரையே நாங்கள் இதுவரை கேட்டது கிடையாது. என் கணவர் ஒரு செப்புக் காசுகூடக் கடன் வாங்கக் கூடியவரும் அல்லர். எங்கள் நில முதலாளிக்கு மட்டுமே. நாங்கள் பணம் கொடுக்க வேண்டும்.

அயலான்

தவறு எதுவுமில்லை, அம்மணி, எங்கள் தொழிலை நாங்கள் நன்கு அறிந்தே வந்திருக்கிறோம். உங்கள் கணவன் திரு கிரஃப்பிற்கு 391 பொன் 10 வெள்ளி கொடுக்க வேண்டும். உங்கள் கணவர் வரட்டும். அவரிடம் எல்லாம் பேசிக் கொள்கிறோம். அதற்கிடையில் நாங்கள் வந்த காரியத்தைப் பார்க்கிறோம்.

அயலானுடன் மற்றொருவனும் வந்து வெளியில் நின்றிருந்தான். அவன் அவனையும் அழைத்துக்கொண்டு புறக்கூடத்தில் சென்றிருந்தான். சிறிது நேரத்தில் தள தளப்பான உடலுடைய ஒரு நடுவயதுடைய ஆடவர் வந்தார். அவரே அவ்வீட்டுத் தலைவர். அவர் வந்தவுடன் சிறுவரை வரவேற்றுப் பின் தனக்குப் பசியாக இருப்பதால் உணவு வட்டிக்கக் கூறினார். உண்ணுமுன் மாது "உங்கள் உணவு வேளையிலும் என்னால் ஒரு கலவரமான செய்தியைக் கூறாமலிருக்க முடியவில்லை" என்று கூறி, அயலார் வந்ததையும் அவர் கூறிய செய்திகளையும் தெரிவித்தாள். அவன் முகம் உடனே களங்க முற்றதாயினும் அவன் தன் மனத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு, “அந்தோ, அதன் தொகை எவ்வளவு இருக்குமோ எனக்குத் தெரியாது. அது வேறுயார் கடனுமல்ல. உன் அண்ணன் கடை முறிவுற்றபோது அவன் கடனாளியாகிய இந்த ரிச்சர்டு கிரஃப் அவனைக் காவலில் வைக்கப் போனான்.