பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




152

II.

அப்பாத்துரையம் - 28

குள்ளேயே அவர்களை ஓட்டங்காட்டிப் பின் சென்று பாடவும் தொடங்கிற்று. ஆனால் ஒரு நாள் ஹாரி அதற்கு உணவு கொடுக்கப் போகும்போது அதைக் காணவில்லை. அது இருந்த மரத்தடியில் அதன் சிறகுகள் சின்ன பின்னமாகச் சிதறிக் கிடந்தன. சிறிது தொலைவிலிருந்து ஒரு பெரிய பூனை பறவையின் கால்களை மட்டும் நகங்களால் பற்றிக் கோதிக் கொண்டிருந்தது. தங்கள் செல்வச் சிறு பறவை கிழிக்கப்பட்டது கண்ட அச்சிறுவருக்கு முதலில் கண்கள் கலங்கின. பின் பூனைமீது சினங்கொண்டு அதைத் தாக்க முனைந்தனர். ஆனால் அது தன்னை அவர்கள் அணுகுமுன் ஓடி மறைந்தது.

டாமி அழுதுகொண்டே ஆசிரியரிடம் வந்து பூனை யினும் கொடிய உயிரினம் இருக்க முடியாது. யாருக்கும் எத்தீங்கும் செய்யாத அப்பொன்னிளம் பறவையைக் கொல்ல யாருக்குத்தான் மனம் வரும்! அதனைக் கிழித்தழிக்கும் உயிரினத்தை உலகில் வைத்திருத்தல் படாது?” என்றான்.

ஆசிரியர் புன்முறுவலுடன் ஹாரியின் பக்கமாகப் பார்த்தார். ஹாரியும் “ஆம், ஐயா; டாமி கூறியது சரி. எனக்கும் அப்படியே தோற்றுகிறது. பார்வைக்கு முனிவர் போலும் அறியாச் சிறு குழந்தை போலும் இருக்கும் இந்த 'நாட்டுப் புலி' கொடுமையின் திருவுருவாகவே அமைந்திருக்கிறது என்றான்.

ஆசிரியர்

இந்தப் பறவை எவ்வுயிருக்கும் கெடுதல் செய்யாதது என்று நீங்கள் கூறுகிறீர்கள். நான் அப்படி நினைக்கவில்லை. ஆனாலும் இந்தப் பூனைக்கு அது எதுவும் தீங்கு செய்ததில்லை, செய்யப் போவதுமில்லை என்பதை ஒத்துக் கொள்கிறேன். அப்படி யானால் பூனைக்கு அதன் பேரில் வேறு என்ன பகைமையிருக்கக் கூடும்?

ஹாரி

அதற்குப் பகைமையிருக்க வழியில்லை. அது அதைத் தின்னும் பொருட்டே கொன்றிருக்க வேண்டும்.