பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




154

அப்பாத்துரையம் - 28

எடுத்து, மரக்கிளையில் வைத்துச் சிறிது சிறிதாகச் சிதைத்துத் தின்கிறது. பூனையைச் சாது என்று நினைத்தது போலவே இதனையும் சாது என்று முற்றிலும் நினைத்திருந்தோம். இப்போது இன்னும் சிறிய உயிரினங்களுக்கு இதுவும் ஒரு குட்டி எமன் என்று கண்டோம்.

ஆசிரியர்

ஆம், இது உலக இயல்பு. பூனைகள் எலிகளைக் கொன்று நாள்தோறும தின்கின்றன. நாம் அதைத் தடுக்க எண்ணுவதில்லை. ஏனென்றால் எலிகள் பண்ணும் தொல்லையை ஒழிக்கவே நாம் பூனையைச் செல்வமாக வளர்க்கத் தொடங்கினோம். பூனையில்லா விட்டாலும் பொறியைவைத்துப் பிடித்துக் கொல்லவே செய்வோம். ஆனால் நாம் எலியைக் கொல்வது தின்பதற்காக அல்ல. பின் எதற்காக?

டாமி

அது நம் உணவுப் பொருள்களை அழிக்கிறது. ஆசிரியர்

நன்று; அப்படியானால் ஒரு உயிர் இன்னொருயிரைக் கொல்வதற்குப் பசிமட்டுமல்ல, தன்னலமும் ஒரு காரணம். மனிதர் உணவு இது என்று தெரிந்து மனிதர்மீது பகைமையால் எலி நம் உணவை அழிப்பதில்லை. ஆயினும் அதன் செயல் நமக்குத் தொல்லை விளைப்பதால் அதனைக் கொன்று ஒழிக்க விரும்புகிறோம். மனித நாகரிகம் தொடங்கிய நாள்தொட்டு மனித இனம் எலிகளினத்தின் மீது ஓநாய் போர்தொடுத்துப் பூனையினத்தின் உதவியுடன் கொன்றொழித்துக் கொண்டுதான் வருகிறது. பதினாயிரக்கணக்கான ஆண்டுகளாக நடக்கும் இப்போராட்டம் இன்னும் ஓய்ந்து விடவில்லை. ஏனெனில் இன்னும் உலகில் எலிகள் இருந்து கொண்டு தான் இருக்கின்றன. மனிதர் கொன்றொழிக்கும் வேகத்தை விட அது பெற்றுப் பெருகும் வேகம் மிகுதி. அது பெருகும் வேகத்தைவிட அதனை வேகமாகக் கொன்றொழித்து இப்பெரிய 'இனப் போராட் டத்தை' முடிக்க மனிதனறிவும் விஞ்ஞானமும் இன்னும் வகைதேடிக் கண்டுபிடிக்கவில்லை.