பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாழ்வாங்கு வாழ்தல்

ஹாரி

155

எலி இனமா மனித இனத்தின் எதிரி? நீங்கள் கூறுவது புதிர்போடுவது போலிருக்கிறதே!

ஆசிரியர்

ஆம் எலி இனம் மட்டுமல்ல. அதனிலும் எவ்வளவோ சிறிய உயிர்கள் கூட மனித வல்லமைக்கு மேற்பட்ட ஆற்ற லுடையவையாக இருக்கின்றன. மாந்தர் தலையையே வாழும் உலகமாகக் கொண்ட பேன், அவர்களின் அழுக்காடை, தட்டு முட்டுப் பொருள்களில் கீறல் குழிவுகள் ஆகியவற்றி லேயே தங்கள் பேரரசாட்சி செலுத்தும் மூட்டைப் பூச்சிகள், சதுப்பு நிலத்தில் பிறந்து சாக்கடையிலும் மனிதர் அழுக்குப் பழக்கவழக்கங்களிலும் புதுக் குடியேற்ற நிலங் கண்டு வாழும் கொசுக்கள் முதலியன மனிதனால் இன்னும் அழிக்கப்பட முடியாத அளவுக்குப் பெருகும் ஆற்றலில் வல்ல பேரினங்கள் ஆகும். கரடி புலி சிங்கத்தை எறி படை, எய்படை, சுடுபடைகளால் வென்ற மனிதன் இவற்றின் பெருகும் ஆற்றல் முன்னும் சிற்றுருவின் முன்னும் செயலற்றவனாகவே இருக்கிறான். இவற்றிலும் நுண்ணியவையான, மனிதன் கண்ணுக்குப் புலப்படாத நோய் அணுவுயிர்கள் பல, இவ்வகைகளில் இன்னும் பெருக்கமும், பிழைத்துத் தப்பும் ஆற்றலும் வாய்ந்தவை. மருத்துவ அறிஞர் இவற்றுடன் போராடவே புதுப்புதுக் கருவிகளைக் கண்டுபிடிக்கப் பாடுபட்டு வருகின்றனர்.

டாமி

எங்கோ தொடங்கி மனித நாகரிகம் பற்றிய பல அரிய செய்திகளை விளக்கியுள்ளீர்கள். பசியும் தன் நலமும் நாகரீகத்துக்கே அடிப்படை என்று கண்டோம். பகைமை விடுவிக்கும் பண்புகள் இவை மட்டுமா?

ஆசிரியர்

இல்லை. வை அடிப்படைப் பண்புகள் மட்டுமே. துணைப் பண்புகளும் உண்டு. கொன்று பழகிய உயிர், ஓய்வு நேரங்களில் விளையாட்டாகவும் கொல்லும். இதில் வீர விளையாட்டும் உண்டு.பொழுதுபோக்கு விளையாட்டும் உண்டு.