பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




158) ||

அப்பாத்துரையம் - 28

மிதித்தழித்தே அது போக வழிகாண வேண்டும். அவ்வழக்கத்தின்

பழக்கம் தான் இது.

டாமி

விலங்குகள் குணம் மாறுமா?

ஆசிரியர்

மாறும். ஏனெனில் ஒவ்வொன்றுக்கும் மனிதனளவு அறிவு இல்லாவிட்டாலும் சற்றுக் குறையச் சிறிதளவாவது அறிவு உண்டு. சிவந்த பழங்களைத் தின்னும் கிளிக்கு மிளகாய்ப் பழம் கொடுத்துப் பாருங்கள். முதல் நாள் தின்று எரிவால் அவதியுறும்; மறுநாள் அந்நிறப்பழங்களைக் கண்டாலே வெறுக்கும். குரங்குக்குப் பழுக்கக் காய்ச்சிய இரும்புத் துண்டைக் கொடுங்கள். முதல் நாள் பிடித்துக் கை கொள்ள வைத்துக் கொள்ளும். அது தீ என்று அதற்குத் தெரியாது. அடுத்ததடவை சூடு கண்ட பிள்ளைகள்போல அதுவும் அத்தோற்றமுள்ள பொருள்களைக் கண்டாலே விலகி ஓடும்.

ஹாரி

மனிதன் அறிவு எவ்வகையில் இவற்றினும் சிறந்தது? அளவில் மட்டுந்தானா?

ஆசிரியர்

அளவிலும் சிறந்தது. தன்மையிலும் சிறந்தது. விலங்கு களைப்போல மனிதன் அனுபவத்தால் அறிகிறான். அறிந்த அனுபவ அறிவைத் திரட்டி மரபாக்கி நாகரிகமாக்குகிறான். அறிந்தவற்றிலிருந்து அறியாதவற்றை ஊகிக்கிறான். இது அளவில் மிகுந்த அறிவாகிறது. ஆனால் தன்மையிலும் மனிதனுக்கு வேறுபாடு உண்டு. அவன் புதிய அனுபவங் களை உண்டு பண்ணுகிறான். கருவிகள் உண்டுபண்ணுவது, பொறி அமைப்பது, பிற விலங்குகளின் பண்புகளை மாற்றுவது, சமைத்தல், பயிரிடுதல், தெரிந்த அறிவைத் தன்னினத்தவர்க்கு அறிவிக்க மொழியும் அதற்கு வரிவடிவம் ஆக்குவது, படம், உருவம் அமைத்தல், கலங்கள் ஊர்திகள்