வாழ்வாங்கு வாழ்தல்
159
அமைப்பு, காரண காரிய ஆராய்ச்சியால் வருங்காலமறிந்து திட்டமிடுவது ஆகிய இவை மனித அறிவின் தன்மையையே மாற்றி அமைத்துள்ளன.
டாமி
இவ்வளவும் மனிதனின் உயர்ந்த திறத்தைக் காட்டு வனவே. அப்படிப்பட்ட மனிதன் விலங்குகளிடத்தில் ஏன் அன்பு செலுத்த வேண்டும்?
ஆசிரியர்
விலங்குகளும் தன் குஞ்சு குட்டி, தன் இனத்தில் அன்பு செலுத்துகின்றன. ஆனால், பகைவரையும் அன்பால் பிணைத்து நட்பாக்கும் அன்பு மனிதனின் சிறப்பியல்பு ஆகும். காரணமில்லாமல் பகைகொள்வதை விலங்குகள் வளர்க்கின்றன. காரணமில்லாமலே அன்பு காட்டுவதை மனிதன் வளர்க்கிறான். இதற்குத்தான் அருள் என்று பெயர். இதுவே மனிதன் கண்ட கடவுட் பண்பு. விலங்குகளுக்குக் கடவுளைப் பற்றிய கருத்தும் கிடையாது. இக்கடவுட் பண்பும் கிடையாது. இப்பண்புடை யாரை, இதில் வழி காட்டியவரையே மனிதன் அருளாளர்' எனப் போற்றுகிறான். இயேசு, ஸென்ட் பால், ஸென்ட் ஃபிரான்ஸிஸ் அஸ்ஸிஸி, மார்ட்டி ன் லூதர் ஆகி கியோர் இத்தகைய அருளாளர்.
ஆசிரியரும் மாணவரும் இங்ஙனம் பேசிக் கொண்
டிருக்கையில் பனிமூடிய வானிடையே மேல் பால் விழும் ஞாயிற்றொளியின் செங்கதிர்கள் மங்கிய கழுநீர்ப்பூ வண்ணத்துடன் விளங்குவது கண்டனர். சிறிது நேரம் அக்காட்சியிலீடுபட்டிருந்து பின் தம்தம் இல்லத்துக்கு மீண்டனர்.
அடிக்குறிப்புகள்
1. Rabin Redbreast.
2.
இந்தியாவில் புத்தர், அசோகர், திருவள்ளுவர், சிபிச் சோழன், வள்ளலார் இத்தகைய அருளாளர்.