17. ஏழைச் சிறுவன் நன்றியுணர்வு
L
பனிக்காலத்தின் நடுவில் ஒருநாள் வழக்கத்துக்கு மாறாக வானம் வெளிவிட்டிருந்தது. ஆகவே சிறுவரிருவரும் வெளியில் சென்று உலவினர். நெடுந்தொலை சென்றபின் திடுமெனப் பனி பொழியத் தொடங்கிற்று. பனி மூடிய பாதைகளில் அவர்கள் வழி தப்பிச் சென்று விட்டனர். பனியின் கடுமையும் மிகுதியாகியதால் இருவரும் ஒரு பெருமரத்தின் பொந்தினை அடைந்து அதில் தங்கினர். பசி தாங்கிப் பழகாத டாமி இப்போது பசியாலும் குளிராலும் நடுங்கி அவதியுற்றான். ஹாரி “இப்போது வழியுந் தவறிவிட்டது. பனியாலும் வெளிச்செல்ல முடியவில்லை. பனி ஓயுமட்டும் நாம் இங்கேதானிருக்க வேண்டும்" என்றான். டாமி "ஐயோ, எவ்வளவு நேரம் இருக்க வேண்டுமோ? எனக்குப் பசிகாதை அடைக்கிறது. ஆனால் பசியைக் கூடத் தாங்கிக் கொள்ளலாம் போலிருக்கிறது. குளிர் தாங்கமாட்டாமல் உடல் மறுத்துப்போகிறதே!” என்றான்.
ஹாரி சிரித்துக் கொண்டு, "இவற்றிடையே தான் நாம் மனித மூளைக்கு வேலை கொடுக்க வேண்டும். இம்மரம் நமக்கு ஓரளவு பாதுகாப்புத் தருகிறது. இதனைச் சூழ்ந்துள்ள சுள்ளிகளைப் பொறுக்கி அனலுண்டாக்குவோம். அதில் குளிர் காய்ந்தபின் வேண்டுவதைச் சிந்திக்கலாம்" என்றான். அதன்படியே இருவரும் சுள்ளியும், உலர்ந்து பனியில் நனையாத சருகுகளும் தேடிவந்து குவித்து மூட்டமிட்டனர். அடியில் சருகும் காய்ந்த சுள்ளியும் மேலே சற்று ஈரமான வற்றையும் டு மூட்டத்தை நீடிக்க வைத்தனர். செங் கொழுந்து விட்டு புகைமூடி எரியும் அனலில் இருவரும் கை கால்களை வாட்டிக் குளிர் தணித்துக் கொண்டனர். டாமி "ஒன்றுக்கும் உதவாத சுள்ளிகளிலல்லவா இந்நேரம் நம் உயிர்ச்சக்தி தங்கியிருக்கிறது. நான் இதனை இவ்வளவு
டு
L