(162)
|–
அப்பாத்துரையம் - 28
அறியாத காத்தியர், விஸி காத்தியர், ஊணர்கள் படையெடுத்து அழிக்க முடியவில்லையா? இன்ப வாழ்வே நாகரிகம் என்று நினைப்பவர்கள் எளிய முரட்டு வாழ்வு வாழும் காட்டு மனிதர்களுக்கு இரையாகிறார்கள். ஏழை நாகரிக முறைகளைக் கையாளும் வரைதான் அவனுக்கு அடிமைத்தனம். அவன் காட்டு மிராண்டியானால் நாகரிகமே அவன் கைப்பட்டு அழியும்.
டாமி
அப்படியானால் நாகரிகம் வாழ செல்வரும் உழைத்து உழைப்பாளி ஆகவேண்டும். ஏழைகளையும் தங்கள் இன்ப வாழ்வு வாழப் பழக்க வேண்டும்.
ஹாரி
ஆம்; அதுவே உயர் நாகரிகம்; நிலையான, உண்மை யான நாகரிகம்.
டாமி
நான் இனி செல்வர்களைத் திருத்தவும் ஏழைகளை உயர்த்தவும் பாடுபடுவேன். இரண்டிலும் நீ ஒப்பற்ற துணைவனாக இருப்பாய். ஆசிரியர் ஒப்பற்ற வழி காட்டி யாக இருப்பார். சரி, இப்போது குளிர் காய்ந்து கொண் டோம். உணவுக்கு வகை தேடவேண்டும்.
இச்சமயம் அவ்வழி ஒரு சிறு பையன் பனிப் புயலிடையே கூட ஒரு கட்டு விறகைச் சுமந்து கொண்டு பாடி ஆடிக் கொண்டு வந்தான். அவன் வேறு யாருமல்லன்.டாமியின் உதவி பெற்ற சிறுவன் ஜாக்கி ஸ்மிதர்ஸே. அவன் அவ்விருவரும் அனல் காயப்படும் பாட்டைக் கண்டு, “அண்ணன்மீர், என் வீடு அருகிலேயே இருக்கிறது. இந்த மரப் பொந்தைவிட அங்கே வாய்ப்பாகத் தங்கி இளைப்பாறலாம் வாருங்கள்” என்று அழைத்துச் சென்றான்.
று
சிறுவன் தாய் தந்தையரும் தம்பி தங்கையரும் டாமி யையும் ஹாரியையும் அன்புடன் வரவேற்று, உலர் ஆடையும் கணப்புதவியும் அளித்தனர். சிறுவன் "ஐயா உங்களுக்குத் தரத்தக்க நல்ல உண்டியில்லையே என்று வருந்துகிறேன்.எங்கள்