வாழ்வாங்கு வாழ்தல்
163
வீட்டுத் தவிட்டப்பத்தை நீங்கள் உண்ண முடியாதே!" என்று வருந்தினான்.
டாமி “யார் சொன்னது தின்னமுடியாதென்று. நீங்கள் அதுவேனும் கொடாவிட்டால் நாங்கள் பட்டினி தானே கிடந்து மடிய வேண்டும். உங்களுக்கு வைத்துக் கொண்டு எங்களுக்கும் அதில் சிறிது கொடுத்தால் தின்று பசியாறுகிறோம்” என்றான்.
ஜாக்கியும், அவன் உடன் பிறந்தாரும் இரு மாணவருக் கும் தவிட்டப்பம் தந்து, தாமும் உண்டனர். இதற்குள் டாமியையும் ஹாரியையும் காணாமல் திரு பார்லோ கவலைப்படுவாரோ என்றெண்ணிய வீட்டுத் தலைவர் திரு ஸ்மிதர்ஸ் சிறுவரை அங்கேயே இருக்கக் கூறிவிட்டுத் திரு பார்லோ இல்லம் சென்றார். பார்லோ எங்கும் ஆள் விட்டுத் தானும் தேடும் முயற்சியிலேயே ஈடுபட்டுக் கவலையுட னிருந்தார். திரு ஸ்மிதர்ஸைக் கண்டு அவர்களைப் பற்றிக் கேட்டதுமே அவர் முகமலர்ச்சியடைந்து, "தங்கள் வரவு நல்வரவு. தாங்கள் கொணர்ந்த செய்தி இன்னும் மகிழ்ச்சிக் குரியது. என் சிறுவர்க்கு உதவியும் செய்து அவர்களைப் பற்றிய செய்தி கொண்டு வந்து கவலை மாற்றிய தங்களுக்கு நான் எவ்வளவோ கடமைப்பட்டுள்ளேன்” என்று அளவளாவினார்.
சில நேரத்திற்குள் பார்லோ திரு. ஸ்மிதர்ஸுடன் அவர் இல்லம் சென்று சிறுவரை அழைத்து வந்தார். இனிமேல் வீட்டைவிட்டு நெடுந்தொலை செல்லாது எச்சரிக்கையாக இருக்கும்படி அவர்களுக்கு அறிவுரை கூறினார்.