வாழ்வாங்கு வாழ்தல்
165
விளையாட்டிடையேயும், உலாவினிடையேயும், வினையாட லிடையேயும் திருபார்லோ மாணவர்கட்கு விலங்கியல்புகள், செடிகொடியின் இயல்புகள், மருந்து வகைகள், கனிப் பொருட் செல்வம் ஆகியவற்றைப் பற்றியும்; குடும்பம், வகுப்பு, ஊர், நாடு, உலகம் ஆகியவற்றின் ஆட்சி வகைகள், நாகரிக நிலை ஆகியவற்றைப் பற்றியும், பல நாட்டு மக்கள் பழக்க வழக்கங்கள் பற்றியும், நிலவகை, நிலச் செல்வம், கடற்பரப்பு, கடற்செல்வம் ஆகியவற்றை பற்றியும், மண்ணுலகின் உட்கூறுகள், புறக்கூறுகள், அவற்றின் அமைப்பு, தன்மை, அவை தோன்றிய காரண காரிய விளக்கம், மண்ணுலகை யொத்த பிற கோளுலகங்கள், ஞாயிறு, விண்மீனுலகங்கள் ஆகியவற்றைப் பற்றியும் ஆர்வமூட்டும் கேள்விகளை எழுப்பி, விளக்கங் காணும்படி செய்வித்தார். உடலாற்றலால் தொழி லாற்றிச் செல்வமாக்குவதினும், மிகுதியாக அறிவாற்றலால் தொழிலாற்றிச் செல்வம் பெருக்கும் வகைகளை அவர்கட்கு அறிவுறுத்த எண்ணி, அவர்களை அவர் பொழுதுபோக்காகத் தோட்டத்திற்குப் பனிக்கால இறுதிநாட்களில் ஒரு நாள் அழைத்துச் சென்றார்.
அப்போது பனிவீழ்வது சிறிது ஓய்வுற்றிருந்தது. ஆனால் பனி உருகுமளவுக்கு வெப்பம் ஏறவில்லை. அதுவே பிள்ளைகள் பனி உருளைகள் செய்து விளையாடும் பருவம். திரு பார்லோ களியாய் இறுகிய பனிச் சேற்றில் சிறிதெடுத்து உருட்டி ஹாரி கையில் கொடுத்தார். இயற்கை உணர்ச்சியால் தூண்டப்பட்ட அவன் அதனை மேலும் பனியுடன் சேர்த்து உருட்டிப் பெரிய பந்தாக்கினான். பனியுடன் பனி சேர்ந்து இறுகிக் கொண்டது.
இவ்வேடிக்கையைப் பார்த்து எழுச்சி பெற்ற டாமி உருளையைத் தன் கையில் வாங்கிக் கொண்டான். ஹாரி மேலும் மேலும் பனியைச் சேர்த்துத் திரட்டவே பந்து பாரிய உருவடைந்தது. அதன் பளு மிகுதியாகி விட்டதால் டாமியால் அதனைக் கையில் வைத்துக் கொள்ள முடிய வில்லை. அவன் அதை மெல்லப் பனிமூடிய நிலத்தின் மீதே வைத்தான்.
L
பிறகு ஹாரியும் டாமியும் அதைப் பனி நிலத்தின் மீதே உருட்டினர்.நிலத்திலுள்ள பனி அதனுடன் சேர்ந்து சேர்ந்து அது