(166) ||
அப்பாத்துரையம் - 28
பெரிதாகிக் கொண்டே வந்தது. அது முழந்தாளுயரத் துக்கு மேல் பெரிதானபோது ஒருவரால் தள்ள முடியாத தாயிற்று. இருவரும் ஒரே சமயத்தில் சேர்ந்து தள்ள வேண்டி வந்தது. அரையளவு உயரமான பின் இருவர் சேர்ந்தாலும் அது அசையவில்லை. இனி உருட்டித் தள்ள முடியாதென்று அவர்கள் முயற்சியைக் கைவிடும் தறுவாயில் ஆசிரியர் ஒரு கோலை டாமியின் கையில் கொடுத்து தை உருளையடியில் நிலத்திலூன்றித் தள்ளு' என்றார். அவன் தள்ளியபோது வியத்தகு முறையில் இருவராலும் தள்ள முடியாத அவ்வுரு அவ்வுருளையை அவனொருவனே தள்ள முடிந்தது. உருளை பின்னும் உருண்டு பெரிதானபின் இருவரும் அக்கோலூன்றித் தள்ளினர். அதன்பின் ஆசிரியர், உருளையின் பின்னால் ஒரு அடைகல் வைத்து அதன்மீது கோலை அடைகொடுத்து அதை மேல்நோக்கித் தள்ளக் கூறினார். உருளை மீண்டும் நகரத் தொடங்கியது.
6
ஒரு
து
ரு கோலால் இது எப்படி முடிந்தது?' என்று இருவரும் ஆசிரியரிடம் கேட்டனர். அதற்கு ஆசிரியர் பொருள்களின் இயல்புகளைக் கூறும் இயல்நூல் துறை களில் அதன் இயக்கம் பற்றிய இயக்க நூல் ஒன்று உண் டென்றும், இங்ஙனம் பொருள்களை இயக்கும் முறைகள் பல உண்டென்றும் கோலால் தென்னும் இம்முறைக்குத் தென்னுகோல் (Lever) முறை என்று பெயரென்றும் கூறி அதன் தன்மைகளை விளக்கினார். மற்றும் ஒரு தோல் பட்டையை உருளையின் பின் கொடுத்து இருபுறமும் கயிறுமாட்டி உருளையை இழுத்துப் பார்க்கக் கூறினார். அப்போதும் அது எளிதாக இருப்பதை அவர்கள் உணர்ந்தார்கள். ஒரு பொருளைத் தூக்குவதைவிடத் தள்ளுவது எளிது என்று தள்ளுவதைவிட இழுப்பது எளிது என்றும் காட்டிவிட்டு இவ்வேறுபாட்டுக்கான காரணத்தையும் அவர் விளக்கினார். மண்ணுலகின் நடுநோக்கி எல்லாப் பொருள்களும் ஒரு ஈர்ப்புச் சக்தியால் இழுக்கப் படுகின்றன என்றும் இதனால் ஏற்படும் பளு நம் உடலையும் தாக்குகிறதென்றும் ஒரு பொருளைத் தூக்கும்போது வெறும் கை முயற்சி மட்டும் வேலை செய்கிறதென்றும் தள்ளும்போது உடலின் கனம் மட்டும் செயலாற்றுகிறது என்றும், இழுக்கும் போது உடலின் கனத்துடன் சேர்ந்து உடலே ஒரு தென்னு கோலாகப் பயன்படுகிறது என்றும் அவர் எடுத்துரைத்தார்.
ம்