பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாழ்வாங்கு வாழ்தல்

169

“பொன் கணக்காகக் கேட்ட இவன் செப்புத் துட்டுக்கும் சிறிதான சல்லிக்கணக்கில் கேட்கிறான். விளையாட்டுக்காகக் கேட்கிறானோ, வெற்றிக்காகத்தான் கேட்கிறானோ! வெற்றியானால் இவன் பைத்தியக்காரன் தான்! இவனை மடக்கிவிடலாம்” என்று எண்ணியவனாய்ச் செல்வன், தாராளமாக ஆணிகளின் மொத்த மதிப்பை நீ கூறிய கணக்குப்படி கூட்டிக் கொடுக்கிறேன். குதிரையைத் தர ணக்கம்தானா?” என்று கேட்டான்.

66

குதிரைக்காரன் 'ஐயா, கணக்குப் போட்ட பின் சாக்கு போக்குக் கூறக்கூடாது. இப்போதே எச்சரித்துக் கொள் கிறேன்' என்றான்.

இச்சமயம் இவை யாவற்றையும் கேட்டுக் கொண்டு ஒரு பக்கமிருந்த கணக்கப்பிள்ளை செல்வனை நோக்கி "ஐயா, கணக்குப் பார்க்காமல் இதனை ஒத்துக் கொள்ள வேண் டாம்” என்றான்.

செல்வன் கணக்கப் பிள்ளையை, நோக்கிக் கடுமையாக "எனக்கு மலிவாகக் கிடைப்பதை அருந்தலாக்கிக் குதிரைக் காரனிடம் கைப்பணம் வாங்க எண்ணமா உனக்கு?" என்றான்.

தன் மீது தன் தலைவன் அவதூறு கூறியதைக் கேட்ட கணக்கப்பிள்ளை, நமக்கேன் இத்தொல்லை என்று தலை கவிழ்ந்து இருந்தான். ஆனால் குதிரைக்காரன் அக்கணக்கப் பிள்ளை அறிவுடையவன், அத்துடன் நல்லவன் என்று எண்ணி, அவனை அவமதித்த செல்வனுக்கு ஒரு பாடமும், கணக்குப் பிள்ளைக்கு ஒரு நல்லூதியமும், அதேசமயம் தனக்குப் போதிய ஆதாயமும் வரும் வகையில் பேச்சைத் திருப்பினான். அவன் செல்வனைப் பார்த்து "ஐயா, என் கணக்குப்படி தர நீங்கள் ஏற்றாய் விட்டது. கணக்கப் பிள்ளை வேறு வகையாகக் கருதுகிறார் போலத் தோற்றுகிறது. ஆனால் நீங்களே கணக்கப்பிள்ளையைக் கடிந்து கொண்ட போது என் நாணயத்தையும் சற்று இழுக்குப்படுத்திக் கூறினீர்கள். ஆகவே அவரவர் தவறுதலுக்கு அவரவர் தண்டனை பெறும் வகையில் நான் ஒரு திட்டம் கூறுகிறேன். நீங்கள் கூறியபடியே ஆணிகளின் தொகை மதிப்பீட்டுக் கூட்டி நீங்கள் எனக்குக் கொடுங்கள். அது எனக்குப் போதும். அது நான் முதலில் கூறிய குதிரையின்