வாழ்வாங்கு வாழ்தல்
173
ஆனால் அங்கே உயிர் வாழ்க்கை மிக மிகக் கடுமையானது. திமிங்கிலமும் நீர்க்குதிரையும் (Seal) அதனைச் சூழ்ந்த கடலிலும் நிலத்திலும் மிகுதி. மக்கள் அதில் மிகக் குறைவு; அதுவும் தென்பகுதிகளிலேயே வாழ்கின்றனர். அவர்கள் உண்ண அங்கே எத்தகைய பயிர்களோ விலங்கினமோ கிடையாது.பேரிடையூறு களுக்கிடையே உயிரைவெறுத்துத் திமிங்கிலத்தையும் நீர்க் குதிரையையும் வேட்டையாடியே அவர்கள் வாழ்கின்றார்கள். அவற்றின் இறைச்சியே அவர்கட்கு உணவாகவும் தோலே ஆடையாகவும் எலும்புகளே கருவிகளாகவும் பயன்படுகின்றன. அவற்றிடையே வாழும் இம்மக்களைப் போன்ற நாகரிகமற்ற மக்கள் உலகில் எங்கும் கிடையாது என்று கூறலாம்.
ஆசிரியரது இவ்விளக்கத்தைக் கேட்ட டாமி “இவ்வளவு மோசமான நாட்டிலேயே இவர்கள் அடைபட்டுக் கிடப் பானேன். நல்ல நாடுகளுக்குச் சென்றாலென்ன? அவர்கட்கு வழி தெரியாதா?” என்று கேட்டான்.
ஆசிரியர்
பழங்கால நிலையில் அவர்களுக்கு வழி தெரியாம லிருக்கலாம். ஆயினும் பழங்காலத்திலும் மக்கள் இடம் விட்டு இடம் போய்க் கொண்டுதானிருந்தார்கள். ஆனால் மனித இயல்பு பிழைக்கவே முடியாதநிலை ஏற்பட்டாலோ அல்லது, மற்றோரினத்தினரால் வாழ எவ்வழியும் இல்லாமல் துரத்தப் பட்டாலோ அன்றி எவரும் தங்கிய இடத்திலிருந்து புலம் பெயர்வதில்லை; தங்கள் வாழ்க்கை எவ்வளவு கடுமையாக இருந்தாலும் அதற்குத் தக்கபடி அவர்கள் வாழப்பழகிக் கொள்கிறார்கள்.
டாமி
பிற உலக மக்களின் நாகரிகத்தைப் பார்த்து நாகரிகப் பட வேண்டும் என்ற எண்ணம் வராதா?
ஆசிரியர்
வெள்ளையரால் பால் அடக்கி ஒடுக்கி அடிமைப்படுத்தப் பட்ட பிறகே மற்ற மக்கள் வெள்ளையர் நாகரிகத்தைப் பார்த்துப்