174)
அப்பாத்துரையம் - 28
பழகி, அதனை உயர்வுடையதென்று எண்ணத் தொடங்கு கிறார்கள். ஆனால் இது, உண்மையில் அவர்கள் அடிமை மனப்பான்மையே என்று கூறலாம். ஏனெனில் வெள்ளையர் கைக்கு அடங்காமல் இருக்கும் நீகிரோக்கள், சீனர், லாப்லந்து வாசிகள் ஆகியோர் எவரும் தத்தம் நாட்டையும் தத்தம் நாகரிகத்தையுமே உயர்வென்று கருதுகிறார்களே அன்றி ஐரோப்பிய நாகரிகத்தை உயர்வாக ஏற்றுக் கொள்ளவில்லை. கிரீஸ்லந்து மக்களும் அது போன்றே வெள்ளையரைத் தம்மினும் கீழான நாகரிகம் உடையவராகவே கருதுகிறார்கள்.
டாமி
அது எப்படிப் பொருந்தும்? ஆடை உடுத்தாததும் பச்சை இறைச்சியைத் தின்பதும் நாகரிகம் என்று கருத முடியுமா?
ஆசிரியர்
ஏன் முடியாது? ஆடை உடுத்த நாம், உடுத்துவது நாகரிக உயர்வு என்று கொள்கிறோம். உடுத்தாத அவர்கள் அதையே நாகரிக உயர்வு என்று கருதுவதும் அதுபோன்ற இயற்கை உணர்ச்சிதானே. எடுத்துக்காட்டாக அணிமணிகள் மிகச் சூடிக்கொள்ளாத நாம் அதையே நாகரிகம் எனக் கருதிக் காள்கிறோம். காதும், மூக்கும் எங்கும் தொளையிட்டு நொறுநொறுவென்று அணிமணி வகையும் பாசியும் பவளமிடும் மக்களை நாம், நாகரிகம் அற்றவர் என்று தானே கொள்கிறோம். நாம் முகத்தில் பெண் தூலும் உடலில் பச்சையும் குத்திக் கொள்வது நாகரிகமற்ற செயல் என்று முற்காலத்திலெண்ணி, பிறகு கீழ் நாட்டவரைப் பார்த்து மேற்கொண்டு இப்போது அது நாகரிகம் என்று எண்ண வில்லையா? புகை குடிப்பது முதலிய பழக்கங்களையும் நாகரிகமற்றவை என்று கருதி நாம் கீழ்நாடுகளிலிருந்து பழகி இப்போது நாகரிகம் என்று கொள்கிறோம். ஆனால் இன்னும் முகமும் உடலும் நாம் சாயமடிக்கப் பழகாததனாலேயே அங்ஙனம் சாயமடித்துக் கொள்ளும் செவ்விந்தியரை நாகரிக மற்றவரெனக் கருதுகிறோம்.