176
அப்பாத்துரையம் - 28
அந்நாகரிகர்களென நாம் கருதும் பல மக்களிடமும், அவர்கள் சிறப்பாகக் கருதும் பல பண்புகள் உண்டு. அவரவர் நாடு அவரவர்க்குப் பொன்நாடு ஆவதுபோல அவரவர் பண்பு அவரவருக்குப் பொன்னான பண்பு. மதத்திலும் இது போல எல்லா மதத்தினரும் தத்தம் மதமே உயர்வு என்பர். இன்று மறுப்பியல் கிறித்தவர் (Protestant Christian) கத்தோலிக்கரையும் கிறித்தவரல்லாத பிற மதத்தினரையும் நாம் நம்மினும் சிறப்புக்குன்றிய மதத்தைப் பின்பற்றியவராகக் கருதுகிறோம். ஆனால் சில நூற்றாண்டுகளுக்குமுன் எடனையும் தாரையும் வணங்கிய இயற்கை வழிபாட்டினராக இருந்தபோதும் அவ்வம் மத முறைகளையே பெருமையுடையதெனக் கொண்டிருப்போம். நாம் இன்று இஸ்லாமியராய் விடக் கூடுமானால் கிறிஸ்தவ மதத்தைக் குறைவுடையதெனக் கருதி, இஸ்லாம் மதத்தையே ஒப்புயர்வற்றதெனக் கருதியிருப்போம் என்பதில் தடையிராது.
டாமி இப்போது, வகுப்புப் பற்றிய தன் கருத்தை இத்துடன் இணைத்தான்.
"நாகரிகம், நாடு, மதம் ஆகியவற்றைப் போலத்தானே வகுப்பும். ஏழையர் ஏழ்மையை உயர்வாகவும் செல்வர் செல்வத்தை உயர்வாகவும் கொள்வது இதுபோன்ற குழு உணர்ச்சியே ஆகும் அல்லவா?” என்று கேட்டான்.
ஆசிரியர் நகைத்து உன் வகுப்புக்கும் நீ நன்றாகப் போராடுகிறாய். அது நன்று. ஆனால் செல்வர்கள் அனை வரும் அதற்குப் போராடவே இல்லை. கிரீன்லாந்து லாப்லந்து மக்கள், வெள்ளையர் தம்மைப் பெருமையுடையவர்களாக எவ்வளவு உறுதியுடன் நம்புகிறார்களோ அவ்வளவு உறுதியுடன் நம்பியே வாழ்கின்றனர். ஆகவே போராட வேண்டிய நிலை அவர்கட்கு இல்லை. ஏழைகளே போராட வேண்டிய நிலையிலுள்ளனர். பெரும்பாலான ஏழையருக்கு அத் தன்மதிப்பு உணர்ச்சி இல்லை என்பதை நீயே ஒத்துக் கொள்வாய்” என்றார்.
டாமி
ஆம், ஹாரியைக் காணு முன்னும் தங்கள் விளக்கங் களைக் கேட்கு முன்னும் அத்தகைய உணர்ச்சி உடைய வர்கள் இருப்பார்கள் என்று நான் எண்ணியதே இல்லை.
ய