பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




180

|–

அப்பாத்துரையம் - 28

அக்கட்டடத்தில் பல அறிவியற் கருவிகள் இருந்தன. அவற்றுள் முக்கியமானவை ஒரு நுண்ணோக்காடியும் ஒரு தொலை நோக்காடியுமே. முதலதின் மூலம் ஒரு சிறுதுளி தண்ணீரிலுள்ள கட்புலனாகாச் சிறு தூசுகளும் சிறு நுண் ணுயிர்களும் பன்னூறாகப் பெருக்கமுற்றுத் தோற்றின.மெல்லிய துணியை அதன் மூலமாகப் பார்த்தால் குறுக்கும் நெடுக்குமான நூல்கள் வண்ண இரும்புப் பாளங்களாகவும் இடையிலுள்ள சிறு தொலைகள் பலகணிக் கம்பியிடையிலுள்ள இ டமளவு அகலமாகவும் காணப்பட்டன. இதற்கு நேர்மாறாகத் தொலை நோக்காடியில் தொலைதூர மலைகள், அருகிருந்து காண்பதுபோல் முழு விளக்கம் பெற்றன. வானத்திலுள்ள விண்மீன்கள் பலவற்றை அது விளக்கமாகக் காட்டியதுடன் திங்களைக் கிட்டத்தட்ட ஒரு நிலப் பரப்பாகக் காட்டப் போதியதாக இருந்தது. சிறுவர் இவற்றைக் கண்டு வியந்தனர். ஆசிரியர் அவற்றின் பயன்களையும் விளக்கினார்.

தொலை நோக்காடியையோ அதுபோன்ற புதுக் கருவிகளையோ அறியாத மக்களிடையே முதல் முதல் அது விளைவித்த மயக்கங்களைப் பற்றிய ஒரு கதையை இச்சமயம் ஆசிரியர் சிறுவர்கட்கு எடுத்துரைத்தார்.

தொலைநோக்காடி பற்றிய கதை

ஆப்பிரிக்காவின் உள்நாட்டுப் பகுதியிலுள்ள ஒரு நாட்டின் தலைவனுக்கும் அவன் குடியின் உறவினனான மற்றொரு தலைவனுக்கும் மாறாப் போராட்டம் நடந்து வந்தது. அதில் உறவினன், பழந் தலைவனை அருகிலுள்ள மலையகத்துக்கு ஓட்டி விட்டு,நாட்டாட்சியைக் கைப்பற்றினான். பழைய தலைவன் தன் உழையர் குழுவினுடன் மலையில் மிகக் கவலையோடு காலம் கழித்தான். அங்கும், புதிய தலைவன் எந்த நேரம் படையெடுத்து வந்து தன்னை அழிப்பானோ என்று அவன் ஓயாது அஞ்சிக் கொண்டே இருந்தான்.

இப்போது, அவனுடன் முன்னே பழகி நண்பனாக இருந்த ஒரு வெள்ளையன் அங்கே வந்தான்.எதிர்பாராது காட்டிடையே கண்ட தன் தோழனுடன் அவன் அளவளாவி நலமுசாவினான். தலைவன், தன் அவல நிலையிலும் அவனை ஆதரவுடன்