பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாழ்வாங்கு வாழ்தல்

181

வரவேற்றுத் தன் இன்னல்களையும் எடுத்துரைத்தான். வெள்ளை நண்பனுக்கு அப்போது ஓர் எண்ணம் உண்டாயிற்று. ஐரோப்பாவில் அப்போதுதான் தொலைநோக்காடி புதிதாக வழங்கத் தொடங்கியிருந்தது. ஆப்பிரிக்கக் காடுகளில் தொலைவிலுள்ள பகை விலங்குகளையும் செய்திகளையும் அறிய உதவும்படி அவன் அதனைத் தன் பயணப் பையிலிட்டுக் கொணர்ந்திருந்தான். அதனை எடுத்து அவன், தலைவன் நகரை நோக்கிப் பார்த்தான். புதிய தலைவன், பழைய தலைவனைப் பற்றிக் கவலையில்லாமல் தன் பெரு மக்களுடன் விருந்தாடிக் கொண்டிருந்ததைக் கண்டு “நண்பரே, தமக்குக் கொஞ்சமும் கவலை வேண்டாம். புதிய தலைவன் உம்மைப்பற்றிய எண்ணமே இல்லாமல் விருந்தாடிக் கொண்டுதானிருக்கிறான் என்றான்.

பழைய தலைவன் த

6

""

அது உங்க உங்களுக்கு எப்படித் தெரியும்?' எனவே, 'இதோ பாருங்கள்' என்று வெள்ளை நண்பன் அவனைத் தொலை நோக்காடியில் பார்க்கக் கூறினான். தலைவன் அதனைப் பார்த்ததுமே தன் தோழர்களைக் கூவிப் 'படைதிரட்டுங்கள், பகைவன் வந்துவிட்டான்" என்று ஆரவார மிடத் தொடங்கினான். தான் கண்ட காட்சி அண்மையில் நிகழ்வதாகத் தலைவன் எண்ணியதால், புதிய தலைவன் அண்மையில் வந்து பாளையமடித்துள்ளான் என்று அவன் கருதினான். இத்தவறான எண்ணத்தை நீக்கி மெய்மையை விளக்க வள்ளை நண்பனுக்கு நெடுநேரமாயிற்று. விளக்கியபின் அந்நண்பனுக்கு இதே தொலை நோக்காடியின் மூலம் இன்னொரு உதவி செய்யும் எண்ணமும் அவனுக்கு உண்டாயிற்று. அவன் தன் நண்பனிடம் நான் சற்று நாட்டுப்பக்கம் போய் வருகிறேன். நான் கூறியபடி கேட்டால், உனக்கு உன் நாடு கைக்குக் கிட்டும்” என்றான். தலைவன், ‘சரி கூறுக' என்றான். “உன் படைகளை அணிவகுத்து இங்கேயே நிறுத்திப் படைக்கலங்களைப் போருக்குச் செல்வதுபோல் ஆரவாரமாக வீசிக் கொண்டிருக்கச் செய். நான் வரும்வரை இது நடக்கட்டும்” என்று வெள்ளை நண்பன் கோரினான்.

66

இதன்பின் அவ்வெள்ளையன் புதிய தலைவனிடம் வந்து, வேறு பல செய்திகள் பேசி விட்டு அவன் பழைய தலைவன்