இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
182
அப்பாத்துரையம் - 28
பேச்செடுத்தபோது 'இதோ அவன் என்ன செய்கிறானென்று இதன் மூலம், பார்' என்றான். புதிய தலைவன் பார்த்ததும் தன்னருகிலேயே பழைய தலைவன் அணிவகுத்துப்போருக்கு வந்துவிட்டதாகத் தோன்றிற்று. அவன் உடனே படைகளை அழைத்துப் ‘பகைவர் கிட்ட வந்துவிட்டனர்.போருக்கெழ நேரம் ல்லை. எல்லாரும் ஓடுங்கள்' என்று கூறித் தானும் ஓடி விட்டான்.
வெள்ளை நண்பன் மலையிலுள்ள தலைவனிடம் சென்று விளங்கக் கூறி, அவனை நாட்டுக்கு அழைத்து வந்தான். அவன் தன் உறவினன், அவன் புது ஆற்றல் பெற்றானென்றெண்ணி,அதன் பின் அவன் மீது போரே தொடராமல் நட்போடு இருந்தான்.
“தொலை நோக்காடி ஆப்பிரிக்கரிடையே இவ்வளவு மலைப்பை உண்டு பண்ணியதில் வியப்பில்லை. எங்களுக்கே அது வியப்பாகத்தானிருக்கிறது" என்றான் ஹாரி.