பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நீலகேசி

ஆராய்ச்சியும் கதைச் சுருக்கமும்

மடலம் (1) நூன்முகம்

நீலகேசி என்ற இந்நூலின் பெயரைப்பற்றி ஆராய்ச்சி யாளர்களிடையே கொள்கை வேற்றுமைகள் ஏற்பட்டிருக் கின்றன. இந்நூலின் ஒவ்வொரு மடலத்தின் இறுதியிலும் இதன் பெயர் குறிப்பிடப்படும்போது, நீலகேசி என்ற பெயருடன் திரட்டு என்ற சொல்லும் சேர்க்கப்பட்டு நீலகேசித் திரட்டு என்று காணப்படுகிறது. திரட்டு என்ற இச்சொல்லே மேற் குறிப்பிட்ட வேற்றுமைகளுக்கு அடிப்படைக்காரணமாகும். திரட்டு என்பது பொதுவாகத் தொகுப்பு அல்லது சுருக்கம் என்று பொருள்படும். ஆகவே நீலகேசித் திரட்டு என்ற பெயர்,இந்நூல் ஒரு பெருநூலின் தொகுப்பு அல்லது சுருக்கம் என்பதை உணர்த்துவதாகச் சிலர் கொண்டனர்.

னால் இந்நூலை மேற்போக்காகப் பார்ப்பவர் களுக்குக்கூட, இது ஒரு நூலின் தொகுப்போ சுருக்கமோ அன்று; முழுமுதல் நூலே என்பது நன்குபுலப்படும். ஆகவே இந்நூலின் பெயர் நீலகேசித் திரட்டு என்று கொள்பவர்கள் திரட்டு என்ற சொல்லுக்கு வேறு பொருள் கொள்ளலாயினர். ஒரு சாரார் திரட்டு என்பது உண்மையில் தெருட்டு என்றிருக்கவேண்டும் எனக் கூறினர். ஆனால் நூலின் ஏட்டுப்படியில் ஓரிடம் நீங்கலாக எல்லா இடங்ககளிலும் திரட்டு என்ற சொல்லே தெளிவாக வழங்கப்பெறுகிறது. இது உண்மையில் பாடபேதமாகக் கூடக் கிட்டவில்லையாதலால், இத்திருத்தம் திருத்துவோரின் நுண்ணிய திறத்தை உணர்த்தும் கற்பனையாகவே கொள்ளத் தக்கதாயிருக்கின்றது.