22. டாமியின் குணமாற்றமும்
ஹாரியின் ஏமாற்றமும்
டாமி இப்போது பல மாதங்கள் தொடர்ந்து ஆசிரியரின் இல்லத்தில் பயின்று வந்ததால் சில நாள் வீடுவந்து செல்லுமாறு அழைப்பு வந்தது. இவ்வளவு நாள் பயிற்சியிடையே ஏற்பட்ட நற்பண்பு நன்கு தோயுமுன்னே பழைய சூழ்நிலையால் அது கெட்டுவிடப்படாதே என்று ஆசிரியருக்குச் சிறிது கவலையாக இருந்தது. ஆகவே அவர் ஹாரியையும் உடன் அனுப்ப விரும்பினார். ஹாரியிடம் இதைக் கூறியபோது அவனும் அதனை மனமுவந்து ஏற்றுக் கொண்டான்.
L டாமியின் வருகை, மெர்ட்டன் இல்லத்தில் யாவராலும் ஓர் ளவரசன் வருகை போலக் கொண்டாடப் பட்டது. ஆசிரியரில்லத்தில் அவன் தானாகச் சிந்திக்கவும் தானாகத் தன் உணவை உண்ணவும் உடுக்கவும் உழைக்கவும் பயிற்றுவிக்கப் பட்டிருந்தான்.ஆனால் மெர்ட்டன் குடியிருப்புக்கருகே வந்தது முதல் அவனுக்குத் தனியாகச் சிந்திக்கவும் நேரமில்லை; அவன் உண்பதும் உடுப்பதும் நடப்பதும் யாவும் பல வேலையாட்களின் ஓர் ஆரவாரச் செயலாகிவிட்டது. பிறர் எழுப்பியே அவன் எழுந்து, பிறர் வண் வண்டியில் யில் இழுத்துச் சென்றே அவன் வெளிச்சென்று, பலர் வணங்கி வழிகாட்டியே அவன் எச்செயலும் செய்ய வேண்டியதாயிற்று. இந்நிலையில் இடைக்காலப் பயிற்சியின் தடம் படிப்படியாக மறைய வேண்டி வந்தது.ஹாரியின் தோழமை ஒன்று மட்டுமே மிகுந்திருந்தது.
ஆனால் ஹாரியை அவ்வில்லத்தில் திரு மெர்ட்டனைத் தவிர யாரும் கவனிக்கவேயில்லை. தொடக்கத்தில் டாமி அவனைப் பிறர் அழையாவிட்டாலும் தான் அழைத்தே எச்செயலும் செய்துவர முயன்றான். ஆனால் பிறர் பிடிவாத