பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாழ்வாங்கு வாழ்தல்

185

பார்க்கவிடாமல் செய்வதே தம் பெருமையைக் காட்டவழி என்று அவர்கள் எண்ணினார்கள்.

ஒருபுறம் ஒதுக்கப்பட்ட ஹாரி இடைமறிக்க முயன்ற போது அவர்கள் 'அடே! உன் வகுப்புக்கு நீ என்று பேச வந்துவிட்டாயா? ஆனால் எங்களிடம் உன் தரமறிந்து பேசு' என்றனர். டாமியின் நண்பரில் சிலர் அவனைப் பழித் துரைத்ததுடன் அடிக்கடி குத்தியும் இடித்தும் விளையாடினர். ஹாரி, டாமி வகையில் தன் பொறுப்பை எண்ணி யாவற்றையும் பொறுத்துக் கொண்டான். அவர்கள் டாமியின் விருந்தினர் ஆதலால் அவர்களை எதிர்ப்பது டாமியின் பெயரைக் கெடுப்ப தாகும் என்று எண்ணினான். ஆனால் இக்காரணத்துக்காகவும் அவனை யாவரும் கோழை என்றனர்.

நண்பர்களில் செல்வன் நாஷ் என்ற ஒருவன், யாவரிலும் மிகுதியாகக் கூட்டத்திற்குத் தொல்லை தந்தான். நகரப் பழக்கமுடைய ஒரு குடியானவன் அவனை நயமாக அடிக்கடி வேண்டிக்கொண்டும் அவன் கேளாமல் தன்னிடம் நயந்து பேசிய அவனையே கயவன் என்று கூறி முகத்தில் குத்தினான். இதனால் பொறுமை இழந்த அவன், செல்வன் நாஷை அவன் தோழர் காணப்பிடித்துக் குலுக்கிக் கீழே நிலத்தில் தள்ளி, அவன் நெஞ்சில் காலை ஊன்றிக் கொண்டு உட்கார்ந்தான். "அமரிக்கையாக இருக்கத் தெரியாததனால் இப்போது அமரிக்கையாய்க் கிடக்கப் படித்துக்கொள்” என்றான். தன் வீம்பனைத்தும் விட்டு அவன் பெட்டிப் பாம்பாய் அடங்கி யிருந்தான். டாமியும் நண்பரும் அதுகண்டு வாலாட்டாமல் வாளா இருந்தனர். அதன்பின் மற்றக் குடியான நண்பர் இடையீட்டின் பேரில் அவன் “இவர்கள் உயர்குடியினருமல்லர். பொதுக்குடியினரும் அல்லர். தம் தகுதி தெரியாக் கயவர்கள். ஆயினும் இவர்களுக்கு இன்று இவ்வளவு பாடம் போதும். மேலும் இவர்களுடன் இருக்கும் பையன் மிக நல்லவனாகத் தோற்றுவதால் அவனுக்காகவே இத்தெறுதலையை இத்துடன் விடுகிறேன்” என்றுகூறிச் செல்வன் நாஷ் மீதுள்ள காலை எடுத்து அவனைப் போகவிட்டான்.