188
அப்பாத்துரையம் - 28
இச்சமயத்தில் ஏழையினும் ஏழையான ஒரு நீகிரோச் சிறுவன் பிச்சை கேட்டுக் கொண்டு அங்கே வந்தான். அவன் தான் ஆங்கிலக் கடற்படையில் வேலை பார்த்தவனென்றும் வறுமையில் வாடுவதாகவும் கூறி இரந்தான். பலரும் அவனைக் கண்டு எள்ளி நகையாடினரே அன்றி எதுவும் செய்யவில்லை. ஹாரி அவனுக்கு ஏதேனும் கொடுக்க எண்ணிப் பையில் கையிட்டான். பையனும் ஆவலுடன் ஹாரியிடம் வந்து தன் குல்லாயைக் கவிழ்த்து நீட்டினான். பையில் அரைத் துட்டு மட்டுமே இருந்தது கண்ட ஹாரி உணர்ச்சி குன்றியவனாய், அதை எடுத்துக் குல்லாயில் வைத்தான். சிறுவனோ அவன் குறிப்பு முற்றும் அறிந்து பலமுறை தலை தாழ்த்தி வணக்கம் செய்து சென்றான்.
மஞ்சு விரட்டுக்கான ஏற்பாடுகள் இதற்குள் பெரும் பாலும் முடிந்துவிட்டன. காளைகள் ஓடும் நடு இடத்தைச் சுற்றியிருந்த கம்பிவேலிகள் மட்டும் இன்னும் பூட்டப் படவில்லை. அதற்குள் ஒரு முரட்டுக் காளை கட்டறுத்துக் கொண்டு கூட்டத்தை நோக்கி ஓடி வந்தது. எதிர்பாராது நேர்ந்த இவ்விடையூற்றால் கூட்டம் கலகலத்தது. காளையைத் தடுத்து நிறுத்த அனுப்பப்பெற்ற நாய்களைக் கூட அது குத்திச் சரித்துக் கூட்டத்தினரிடையே புகுந்து அமளி செய்தது. பலர் அதன் காலடியில் பட்டுத் துவைந்து உயிரிழந்தனர். பலர் காயமுற்றனர். செல்வன் மெர்ட்டனும் தோழரும், அது தங்கள் பக்கம் திரும்புவது கண்டு ஓடினர். ஆனால் டாமி ஓடுமுன் அது அவனையே குறியாகப் பார்த்து அவன் மீது பாய்ந்தது. டாமி அதுகண்டு அஞ்சிக் கலக்கமுற்றுக் கால் இடறி விழுந்தான். காளையின் காலடியில் அவன் துவைபட ஒரு கணப்போதே இருந்தது. அதற்குள் ஓடியவர் கீழே விட்டுச் சென்ற தார்க்கோல் ஒன்றை எடுத்துக்கொண்டு ஹாரி, காளையருகில் ஓடி அதைக் குத்தினான். காளை டாமியை விட்டுவிட்டு ஹாரியை நோக்கிக் கொம்புகளைத் தாழ்த்திக் கொண்டு விரைந்தது. இப்போது ஹாரியின் உயிருக்கு இடையூறு என்று நிலைமாறிற்று. இதற்குள் ஹாரியிடம் துட்டு வாங்கிய நீகிரோச் சிறுவன் காளையின் வாலைப்பிடித்து இழுத்துப் பின்னே நின்று அதனை நைய அடித்தான். அதே சமயம் அவன் பின்னங்கால் இடறலுக்கும் திறமையாகத் தப்பிக் கொண்டதால், காளை