பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அப்பாத்துரையம் - 28

(190) | அழைப்பார்கள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. ஆகவே அவன் அன்பு அழைப்பைத் தட்டாமல் ஹாரியுடன் அவன் வீட்டுக்குச் சென்றான். ஹாரியின் தந்தையாகிய திரு சான்ட்போர்டு நடந்ததை எல்லாம் கேட்டு ஹாரியையும் நீகிரோவையும் பாராட்டியதுடன் நீகிரோச் சிறுவனிடம் மிக நன்றி பாராட்டி உணவும் உடையும் தந்து தன் பிள்ளைபோல் சீராட்டினார். அத்துடன் தன் வீட்டை அவன் வீடாகப் பாவித்து அங்கேயே தங்கியிருக்கவும் அவர் அவனை வேண்டினார். சிறுவனும் சமூக வேலிவரம்புகள் அறுத்து எழுந்த இவ்வன்பு ஆர்வத்தினால் மகிழ்ச்சியும் நன்றியும் உடையவனாக அவர்களுடன் அளவளாவி இருந்தான்.