பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




24. மெர்ட்டன் குடியின் மனமாற்றம்

ஹாரியின் வீரத்தைக் கண்டு மனமாற்றமடைந்தது போல் டாமியின் தோழர்கள் பாசாங்கு செய்தனராயினும் உள்ளூர அவன்மீது அவர்களுக்கு இருந்த கசப்பு குறையவில்லை. அவன் வீரத்தால் அவர்களுக்கு அச்சமே மிகுந்தது. டாமியை அவனே காப்பாற்றியது கண்டும் அவர்கள் மனம் மாறவில்லை. அவன் எச்சரிக்கையை மீறி டாமியை இட்டுச் சென்ற தங்கள் தவற்றை மறைக்க அதை அவன் மீதே சுமத்திவிட அவர் துணிந்தனர். டாமியின் வீட்டிலிருந்த பல உயர்குடிப் பெண்டிர் ஹாரியை வெறுத்தனராதலால் அவர்களும் அவர்கள் குற்றச்சாட்டுக்குப் பக்கமேளம் அடிக்கச் சித்தமாக இருந்தனர்.

பெண்களுடன் இருந்து பேசிக் கொண்டிருந்த திருமதி மெர்ட்டன் நெடுநேரமாகியும் டாமியும் தோழரும் வராதது குறித்துக் கவலைப்பட்டு வேலைக்காரரை உசாவினாள். அச்சமயம் ஒரு வேலையாள் ஓடிவந்து “அம்மா, பெரிய இடர் தொடர்ந்து விட்டதம்மா! நம் டாமிக்கு, செல்வன் டாமிக்கு' கூவினான். 'ஐயோ என் பிள்ளைக்கு இடரா! ஐயோ டாமி என்ன ஆனான்?' என்று தாயுள்ளம் அலறித் துடித்தது. உணர்ச்சி மிகுதியால் அவள் உடல் சோர்ந்து விழுந்தனள். பெண்டிர் அவளுக்குத் தேறுதல் உதவிகள் செய்தனர்.

L

திரு. மெர்ட்டன் உடனே என்ன செய்தி என்று அறிய விரைந்து ஓடினார். அவர் சிறிது தொலை செல்வதற்குள் டாமியை ஏந்திக் கொண்டே வேலை ஆட்களும் சிறுவரும் எதிர் வந்தனர். டாமிக்கு உண்மையில் எவ்வகையான இன்னலும்

ல்லை என்றறிந்து மனமமைந்தபின் நடந்தது என்ன என்று உசாவினார். உண்மையை ஓரளவு உய்த்தறிந்தபின் அவர் மற்றவருடன் வீட்டுக்குத் திரும்பினார்.