பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(192

||-

அப்பாத்துரையம் - 28

டாமியை வீட்டிற்குள் கொண்டு வருவதற்குள் திருமதி மெர்ட்டன் மீட்டும் உணர்வு பெற்று எழுந்தாள். மகன் ன்னலின்றி முன்னே கொண்டு வரப்பட்டதும், மீட்டும் மகிழ்ச்சி மீதூரப் பெற்று “ஆ என் குழந்தை; உயிருடன் வந்து சேர்ந்தாயா!" என்று எடுத்து அணைத்துக் கொண்டாள். சற்று ஆறுதலடைந்தபின் அவள் சுற்று முற்றும் தோழர்களைப் பார்த்து அவர்களிடையே ஹாரி இல்லாததைக் கவனித்தாள். உடனே அவள், அவனே இதற்குக் காரணமாக இருந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்து, அவன் மீது தன் அடங்கியிருந்த உணர்ச்சி முழுவதையும் போக்கி “ஆ, அந்தச் சிறு எமகாலன் உன்னுடன் திரும்பி வரவில்லையா? காளைக்கே அவன் இரையாகி இருந்தால் என் வயிற்றில் பால் வார்த்தது போல் இருக்கும்" என்றாள்.

டாமியின் தோழர் கூறியதையும் பெண்டிர் திருமதி மெர்ட்டினறிய உரத்துப் பேசிக் கொண்டிருந்ததையும் அவள் கவனித்தாலேயே அவள் எளிதில் இம்முடிவுக்கு வந்தாள்.

சிறுவன் டாமி "அம்மா, நீ சிறு எமகாலன் என்று யாரை இவ்வளவு கோபத்துடன் வைகிறாய்?" என்று கேட்டான். வேறு யார் இதனைக் கேட்டாலும் அவள் அவர்கள் மீது சீறியிருப்பாள். தன் மகனே கேட்டதில் வியப்புற்று “வேறுயாரை அப்பா நான் வைவேன். உன்னை இந்த இடையூற்றில் தள்ளி விட்டுத் தப்பி இருக்கிறானே, உன் தந்தையின் செல்வப்பிள்ளை, அந்த ஹாரி பயலைத்தான்!” என்று கடுகடுப்புடன் சொன்னாள்.

"யாரம்மா சொன்னது ஹாரி என்னை இடை டையூற்றில் கொண்டு தள்ளினான் என்று. என்னைப் போகக் கூடாது என்று அவன் எவ்வளவோ தடுத்துப் பேசினான். நான் அவன் அறிவுரையைக் கேட்டிருந்தால் இத்தனை டையூறு நேர்ந்திராதே” என்று டாமி தாயிடம் கூறினான்.

திருமதி மெர்ட்டன் ஒன்றும் தோன்றாமல் விழித்தாள்.

“பின் உன்னை அங்கே போகத் தூண்டிய குற்றம் வேறு யாருடையது?” என்று மெர்ட்டன் கேட்டார்.

டாமி : ஹாரி ஒருவன் தவிர, வேறு எல்லாருமே க் குற்றத்திற்குப் பொறுப்பாளிகள் தான், நான் உள்பட.