பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




4

அப்பாத்துரையம் - 28

ஆயினும் தெருட்டு என்ற திருத்தத்தை ஏற்பதானால் அது இந்நூலைக் குறிக்க மிகச் சிறந்த சொல் என்பதில் ஐயமில்லை. ஏனெனில் இந்நூல் உண்மையிலேயே சமய அறிவு கொளுத்த எழுந்தது. தெருட்டு என்பது தெளிவு படுத்துவது என்று பொருள்படும். ஆகவே சமயக் கோட்பாடுகளைத் தெளிவு படுத்தும் இந்நூலுக்கு இப்பெயர் பொருந்துவதேயாகும்.

இன்னும் சிலர் நீலகேசித் திரட்டு என்ற பெயரை நூலின் பெயராகக் கொள்ளாமல், நூலினது உரையின் பெயராகவே கொள்கின்றனர். திரட்டு என்ற சொல்லைத் தெருட்டு என்றே கொண்டால் உரையினைக் குறிக்க இச்சொல் இன்னும் பொருத்தமிக்கதாகும். ஏனெனில் நீலகேசியின் பொருள்களைத் தெளிவுபெற விளக்குவதே இவ்வுரை. மேலும் இவ்வுரை யாசிரியர் பெயருடன் இது தொடர்பு உடையது. அவர் பெயர் சமய திவாகர முனிவர் என்பது. சமண இலக்கியத்தில் அவர் உயர்ந்த மதிப்பு உடையவர். சமய திவாகரர் என்ற அவர் பெயரே அறியாமை இருளகற்றும் சமய ஞாயிறு போன்ற அறிஞர் எழுதிய விளக்கத்துக்குத் தெருட்டு என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கு மானால், அது மிகவும் ஏற்புடையதே என்பதில் ஐயமில்லை. நீலகேசித் திரட்டு அல்லது தெருட்டு இவ்வகையில் நூலின் உரையின் பெயரானால், நூலின் பெயர் நீலகேசி என்றே அமையும்.

எது எப்படியாயினும், முழுமுதல் நூலாகிய இந் நூலுக்கு நீலகேசி என்ற பெயரே பொருத்தமானது என்ற நோக்கத்துடன், எம் வெளியீட்டிலும் இதனை நீலகேசி என்றே முதலில் குறித்தோம். முதற்பதிப்பு அச்சகம் சென்றபின், எமது இம்முடிவு மற்றும் ஒருவகையில் உறுதியடைந்தது.பவானந்தம் பிள்ளையவர்களால் பதிப்பிக்கப்பெற்ற யாப்பருங்கல விருத்தியுரையில் இந்நூலின் பெயர் குறிப்பிடப் பெறும் இடங்களிலெல்லாம், நீலம் என்றும் நீலகேசி என்றும் மட்டுமே குறிப்பிடப்படுகின்றது.ஓரிடத்தில் தருக்கமாவன,ஏகாந்த வாதமும் அனேகாந்த வாதமும் என்பன. அவை குண்டலம், நீலம், பிங்கலம், அஞ்சனம், தத்துவதரிசனம், காலகேசி முதலிய செய்யுட் களுள்ளும் சாங்கிய முதலிய ஆறு தரிசனங்களுள்ளும் கண்டு கொள்க” என்றும், இன்னோரிடத்தில் (487. ம் பக்கம்)“சிந்தாமணி,