வாழ்வாங்கு வாழ்தல்
193
திருமதி மெர்ட்டன் தன் தவறு உணர்ந்து குழப்ப முற்றாள்.
ஹாரி மீதுள்ள குற்றம் தவிர்ப்பது கண்ட உயர்குடிப் பெண்களில் ஒருத்தி “ஹாரி இத்தகைய வீர விளையாட்டுக் களில் செல்லமாட்டான். அவன் கோழை ஆயிற்றே. இடையூறு என்றால் தான் ஓடிவிடுவானே” என்று குற்றத்தை மாற்றிக் கூறினாள்.
ஆனால் டாமி, "அம்மா ஹாரி குற்றவாளியும் அல்ல கோழையுமல்ல. அவன் வீரன். என்னை அவன் தான் காப் பாற்றித் தானே அவ்விடருக்குள் குதித்தான். அவனுக்கு என்ன ஆயிற்றோ தெரியவில்லை. உங்கள் தலைவர் சொல்லையும் கேட்டு நானும் அவனைப் புறக்கணித்ததுடன் பலவகையில் அவமதித்தும் விட்டேன்" என்றான்.
இதற்குள் முடிவுவரை இருந்து பார்த்து வந்த வேலையாட்களில் ஒருவன் “நம் செல்வன் டாமி கூறுவது உண்மையே.டாமிக்கு வந்த இடையூற்றை ஹாரி தன்மீது ஏற்றுக் காளைக்குப் பலியாகத்தான் இருந்தான். ஆனால் ஹாரியைப் போலவே வீரனான ஒரு நீகிரோச் சிறுவன் வந்து ஹாரியையும் காத்ததுடன் காளையுடன் நெடுநேரம் மல்லாடி மற்றவர் அதனை அடக்க உதவினான். நல்ல காலமாக ஹாரி தலையிட்ட பின் யாருக்கும் தீங்கு இல்லை. டாமிக்கு முன்னே காளையின் கலசலால் மட்டும் சிலர் காயமுற்றும் ஒருவர் இருவர் இறந்தும் போயினர்” என்றான்.
ஹாரி மீது அவதூறு கூறி முன் வந்த பெண்கள், இப் போது ஹாரியைப் புகழலாயினர். பரவச திருமதி மெர்ட்டன் மட்டும் ஒன்றும் சொல்லத் தோன்றாமல் வெட்கித் தலை குனிந்தாள்.
திரு. மெர்ட்டன் வேலையாளை நோக்கி “எல்லாம் சரி, ஹாரி எங்கே? அவன் ஏன் இன்னும் வரவில்லை" என்று கேட்டார். வேலையாட்களுள் ஒருவன் “ஐயா, டாமியுடன் எல்லோரும் வந்துவிட்டனர். ஹாரி நீகிரோச் சிறுவனைக் கவனித்துக் கொண்டு பின் தங்கியிருந்தான். ஆனால், நான் திரும்பி வரும்போது ஹாரியும் நீகிரோச் சிறுவனை அழைத்துக் கொண்டு தன் வீட்டுக்குச் செல்வதைப் பார்த்தேன்” என்றான்.