வாழ்வாங்கு வாழ்தல்
195
சிறிது மறந்து அவரை அன்புடன் வரவேற்றார். ஆனால் இந்நல்லார் முன்னிலையில் தன் மகன் செய்த குற்ற முழுவதற்கும் தானே பொறுப்பாளி என்பது அவர் நினைவுக்கு வந்தது. உடனே அவர் நடந்த அனைத்தையும் சுருக்கமாகக் கூறி, ஹாரி வகையில் தன் குடியினர் நடந்து கொண்ட தகுதி தவறிய முறைக்கு மன்னிக்கவும் அதுவரையில் ஹாரியின் மன்னிப்பையும் கோரும்படியும் வேண்டினார். ஆசிரியர் "ஏதோ இயற்கைத் தவறுடன் தான் நேர்ந்திருக்கக்கூடும். ஒன்றும் மீட்க முடியாக்குறை நேர்ந்துவிடவில்லை. ஹாரி எதுபற்றியும் குறைபடுபவனும் அல்ல" என்றார்.
திருமெர்ட்டன்: அதனால்தான் நான் இன்னும் வருத்தம் அடைகிறேன். அத்தகையவனையும்கூடத் தகாத முறையில் நடத்தி அவமதித்தவன் என்பிள்ளை என்று நினைக்க முடியவில்லை. அப்பெருந் தன்மையும் நற்குணமும் நன்றியறி தலும் அவனிடம் ஒரு சிறிதுகூட இல்லை என்பதுதான் எனக்கு மீளா அவமானமாக இருக்கிறது.
திரு. பார்லோ: டாமியிடமும் அப்பண்புகள் இல்லாம லில்லை. ஹாரியிடம் அப்பண்புகள் இருப்பதைப் போலவே டாமியிடமும் இயற்கையாகவே இருக்கின்றன. அக்கம் பக்கப்பழக்கமும் சூழ்நிலையும் அவற்றை மாற்றி அமைக் கின்றன. பிறர் சொல்லைவிடப் பிறர் செயல் ஒருவன் நடையை மாற்றி அமைக்கவல்லது.
திரு. மெர்ட்டன், திரு பார்லோவை வீட்டிலுள்ள மற்றையோருக்கு அறிமுகம் செய்து வைத்தார். டாமி அவரை நன்கு வரவேற்றான். ஆனால் அவன் முகத்தில் கிளர்ச்சி இல்லை. அவன் கழிவிரக்கத்தை ஆசிரியர் கவனித்து மனநிறைவடைந்தார். அவன் திருந்த முடியாத அளவு மாறவில்லை என்று கண்டார்.