பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நீலகேசி

5

சூளாமணி, குண்டலகேசி, நீலகேசி, அமிருதமதி என்ப வற்றின் முதற்பாட்டு, வண்ணத்தான் வருவன' என்றும் குறிப்பிடப்படுகிறது. இங்கே நீலகேசித் திரட்டு என்ற பெயரில்லாததுமட்டுமன்று, நீலகேசி என்ற பெயர் கூட அதனுடன் ஒப்புடைய குண்டலகேசி, பிங்கலகேசி, காலகேசி, அஞ்சனகேசி முதலிய நூல்களைப் போலவே, கேசி என முடிவது காணலாம். நூலாசிரியர் இவ்வகை நூல்கள் பெரும்பாலும் கேசி என்று முடிவதை எண்ணியும், இந்நூல் குண்டலகேசிக்கு மறுப்பாக எழுந்ததாதலால் அதன் முடிவை எண்ணியும் நீலகேசி என இதற்குப் பெயரிட்டனராதல் வேண்டும்.

நீலகேசி என்ற ஒரு பெயரே நூற் பெயர் என்று கொள்வது சால்புடையதாயினும், திரட்டு என்ற சொல் அதனைக் குறிக்க ஆசிரியராலோ, பின் வந்தவராலோ சேர்க்கப்பட்டிருக் கலாம் என்று எண்ண இடமில்லாமலில்லை. ஏனெனில் திரட்டு என்ற சொல் வடமொழியிலுள்ள ‘சங்கிரகம்' என்ற சொல்லுடன் இயைபுடையதாகும். இந்நூலை ஒப்ப பல சமயநெறிகளை விளக்கும் பிற நூல்கள் பலவும் வடமொழியில் ‘சங்கிரகம்' என்ற சொல்லடுத்தே பெரும்பாலும் வருகின்றன. சாயணமாதவரின் சர்வதர்சன சங்கிரகம், ஹரிபத்ர சூரியின் ஷட்தர் சன சமுச்சயம், சங்கராசாரியரின் சர்வசித்தாந்த சங்கிரகம் ஆகிய வற்றின் பெயர்களைக் காண்க. இப் பல்வேறு நூல்களைப் போலவே, நீலகேசியும் பிறர் மதம் விளக்கி மறுத்துத் தன் மதம் நிறுவுவதனால், அவற்றைப் போலவே சங்கிரகம் அல்லது திரட்டு என்று குறிக்கப்பட்டிருக்கக்கூடும்.

நூற்பெயரின் இவ்வாராய்ச்சி முடிவு எதுவாயினும் ஆகுக. இது ஒரு முழு நூல் என்பதிலும், இதனைக்குறிக்க வழங்கிய பொதுப் பெயர் நீலகேசி என்பதிலும் ஐயமேற்பட இடமில்லை. ஆயினும் நூலைப் பதிப்பிக்கும்போது நூலின் பெயரைத் தலைப்பில் மட்டுமே நீலகேசி என்று குறிப்பிட்டுப் பதிப்பில் எங்கும் ஏட்டுப்படியில் கண்ட தொடர்களை மாற்றாது அப்படியே அச்சிட்டுள்ளோம்.

2. நூலாசிரியர்

நீலகேசியின் நூலாசிரியரைப்பற்றி நாம் எதுவுமே அறியக்கூடாத நிலையில் இருக்கிறோம். ஆசிரியர் பெயர், இடம்,