கன்னியின் சோதனை
[203
இந்நிலையில் அவனால் அவளை விட்டு அகலவும் முடியவில்லை. அதே சமயம் அவளை உரிமையுடன் அணுகவும் வழி காணாமல் தத்தளித்தான்.
தன் உணவு மூட்டையை அவன் அவள் முன்னே அவிழ்த்துப் பரப்பி வைத்தான்.
"இதோ பார், வேணி! என்னிடமிருப்பது நான்கு பேருக்கு நான்கு நாளைக்குப் போதியது. அப்படி இருக்க என்னுடன் இதைப் பகிர்ந்து உண்பதால் நீ இதற்கு எப்படி எமனாகிவிட முடியும்? நேர்மாறாக, இதை உனக்குத் தராமல் உன்னை நான் போக விட்டால், நான்தான் உனக்கு எமனாகிவிட நேரும். ஆகவே வீண் வாதத்தை விட்டு, இதில் சிறிது பங்கு கொள்!" அவன் அவளை வறுபுறுத்தி உண்பித்தான்.
அரைகுறை விருப்புடன் அவள் ஒரு கை உண்டாள். ஒரு மடக்குப் பதநீர் அருந்தினாள். அதற்குள் ஏதோ எண்ணியவள் போலத் திடீரென்று எழுந்தாள்.
அடுத்த கணம் என்ன நடந்ததென்றே அவனுக்குத் தெரியாது. கல கல வென்ற ஒரு சிரிப்பொலி அவன் காதைத் துளைத்தது. அவன் நிமிர்ந்து பார்க்குமுன் அவள் வேறொரு திசையில் எட்டி நடந்தாள்.
பிட்டும் அப்பமும் பதநீரும் அப்படியே கிடந்தன. அவற்றை அப்படியே போட்டு விட்டு உண்ட கையை உதறிய வண்ணம் அவனும் எழுந்து அவளைப் பின்பற்றினான்.
குளிக்கும் துறை நோக்கி அவள் விரைந்தாள். அவனும் அதே திசையில் விரைந்தான்.
அன்று முழு நிலா நாள், வட்ட வடிவமான வெள்ளித் தட்டுபோல வெண்ணிலா தருவைப் பரப்பில் எழுந்து. அதன் அலைகளை எல்லாம் வெள்ளித் தகடுகள் போல் மின்னி மினுங்கச் செய்திருந்தது. வேறு எந்தச் சமயத்திலும் வேண் மாளும் சரி; வானவனேந்தலும் சரி; அந்த அழகில் கட்டாயம் ஈடுபட்டிருப்பார்கள். ஆனால் இப்போது நேரமில்லை. அத்துடன் குளிப்புத் துறையில் முழு நிலா நாளில் இரவில் வழக்கமாகக் காணப்படும் மக்களின் பெருந்திரள் அன்று இல்லை.