பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(204

அப்பாத்துரையம் - 28

போர்களின் கிலி காரணமாக அங்கொருவர் இங்கொருவராக மட்டும் சில பல ஆடவர். பெண்டிர் குறிப்பாக புத்திளங் காளையர். கன்னியர்-அங்கே நிலவில் புனல் விளையாட்டை நாடி வந்திருந்தனர். வேண்மாள் அச்சிறு கூட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு, பெண் உருக்களிடையே பெண் உருவாகப் பதுங்கிப் பதுங்கி ஓடி, வானவனேந்தலைக் ‘கண்ணாமூச்சு' ஆட் வைத்தாள்.

எது வேண்மாள், எது வேறு பெண் வடிவம் என்று று அறியாமல் வானவனேந்தல் ஒவ்வொரு பெண்ணாக அருகில் சென்று உற்றுநோக்கி அலைந்து கொண்டிருந்தான். அவனது அச்செயல் கண்டு இளம் பெண்கள் பலர் கலவரமடைந்தார்கள்.

ளங்காளையர் பலர் சீறினர். இவற்றை உற்றுக் கவனித் தவாறு ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு மூலையிலிருந்த ஒரு பெண் குரல் கேலிச்சிரிப்புச் சிரித்தது. ஆனால் அச்சிரிப்போ வானவனேந்தலை மேன்மேலும் வேண்மானிருந்த திசை யறிந்து செல்லும்படி தூண்டிற்று. அவன் அச்சிரிப்பின் திசையில் பாய்ந்து சென்று அவ்விலாங்குமீனைப் பிடிக்க ஓடியாடினான்.

றுதியாக அவள் கிட்டத்தட்ட அவன் கையில் சிக்கி இருந்தாள். அதற்குள் அவன் கைப்பிடியிலிருந்து நழுவி அவள் துறையருகே மணல்மீது உட்கார்ந்துவிட்டாள். அவனும் மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்க அருகே அமர்ந்தான்.

66

ஏன் இப்படி என்னை ஏய்க்கிறாய். வேணி? என்னிடம் உனக்கு அச்சமா? வெறுப்பா? நான் உன்னை என்ன செய்துவிடப் போகிறேன் என்று எண்ணுகிறாய்? அல்லது நீ வெறுக்கும்படி என்ன செய்துவிட்டேன்?" என்று மிகவும் நொந்த குரலில் கேட்டான். அவன்.

அவள் மலர்ந்த முகம் உடனடியாகச் சுண்டிற்று. அது சிந்தனையில் ஆழ்ந்தது.

வானவனேந்தல் அவள்மீது கொண்ட பாசத்தின் தன்மையை அவள் அறியாதவளல்ல. ஆனால் அவள் உள்ளம் அன்று பாசத்தையோ தேசத்தையோ நாடித் துடிக்கவில்லை. பாண்டி நாட்டு வாழ்வு அன்று உரிமையற்ற வாழ்வு. அதில் அமைதியில்லை; வாழ்வின் ஆர்வமில்லை.எப்படியாவது அந்தச்