பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கன்னியின் சோதனை

[205

சூழலை விட்டு மனித வாழ்வுக்குரிய இடத்துக்குப் பறந்து செல்லவே அவள் துடித்தாள். அவள் இதயத்தின் ஆழத்தில் இது கடந்து வேறு ஒரு நாட்டமும் இருந்தது. தான் இந்தக் கொடிய நிலத்திலிருந்து தப்பினால் போதாது. தன் நாட்டுக்கு மறுபடியும் விடுதலை, புதுவாழ்வு, உரிமை கிட்ட வேண்டும். அவள் தனி ஒரு உயிர்தான். துணையற்ற பெண்தான். ஆனால் ஏதோ ஒன்று இதற்காக வாழும்படி. இதற்காக வாழ முடியாவிட்டாலும் குறைந்த அளவு இதற்காக மாறும்படி யேனும் அவளை உள்ளூரத் தூண்டிற்று.

அவள் சிந்தனையை-அவள் உள்ளப் போக்கை அறிய முடியாமல் வானவனேந்தல் அவளையே நோக்கியவண்ணம் இருந்தான்.

கண்களைச்

அவள் கண்கள் நேரடியாக அவன் சந்திக்கவில்லை. துறையின் பக்கமாக அவள் பார்வை அங்குமிங்கும் மருண்டு மருண்டு நோக்கிற்று. அவள் நோக்கின் குறிப்பறிய விரும்புபவன்போல அவனும் அத்திசையில் நோக்கினான். தன் கேள்விகளுக்கு மறுமொழியாக, அந்தக் காட்சியிலே ஏதோ இருக்க வேண்டுமென்று அவன் எண்ணினான். அவன் எண்ணியது வீண் போகவில்லை.

"போரின் கோரப்பிடியிலிருப்பவர்கள் என்று இந்த ளங்காளையர். கன்னியரைப் பார்த்தால் தோன்றாது பருவத்துடிப்பு அவர்களை இச்சமயத்தில் இவ்வேளையிலும் இங்கே கொண்டு வந்திருக்கிறது. அதுபோலத்தானே நானும்..."

...அவள் பேசி முடிக்கவில்லை. அவள் சட்டென அவனை நிமிர்ந்து பார்த்தாள்.பின் துறையின் ஒரு திசையில் அப்பார்வை உருக்கத்துடன் திரும்பிற்று. அவனும் அப்பக்கமாக ஆர்வத்துடன் கழுத்தைத் திருப்பினான்.

அவன் கண்ட காட்சி அவன் சிந்தனை அலைகளை உள்ளத்திலும் மெல்ல எழுப்பின.

ஆடவர், பெண்டிர் அனைவருமே வெறும் புனல் விளையாட்டை விரும்பி வந்தவர்களல்ல. இதை வானவனேந்தல் அறிய நெடுநேரம் பிடிக்கவில்லை.