(206
||–
அப்பாத்துரையம் - 28
ஆடவருடன் ஆடவராகச் சிலர் ஊடாடித் திரிந்து வந்தனர். அவர்கள் விளையாடவில்லை; விளையாடுபவர்களைக் காண்காணிப்பவர்கள் போலவே உலவினர். அவர்கள் பார்வை பிறரை-விளையாடுபவரை - அச்சுறுத்துபவையாக, எச்சரிப்பவையாக இருந்தன.
துறையின் இருபுறமும் இவர்களைப் போலச் சிலர் தனித்தனியாகவும் கும்பல் கும்பலாகவும் நின்றிருந்தனர். கூர்ந்து கவனித்தால் அவர்களில் சிலர் வில்லும் வேலும், வாளும் ஈட்டியும் ஏந்தியிருந்தனர் என்பது தெரியவந்தது. புனல் விளையாட்டுப் பழக்கத்திலே அவர்கள் ஒரு போர்க்களத்தையே எதிர்பார்த்து வந்தவர்கள் போலக் காணப்பட்டனர்.
இவற்றைக் கண்ட வானவனேந்தல் கண்கள் ஆழ்ந்த கலக்கத்தால் விரிவுற்றன. அவன் கண்ணோட்டம் அலைகள் மீது தவழ்ந்தது.
தருவை ஒரு பெரிய ஏரி-ஆனால் எல்லா ஏரியிலும் பெரியது. கடலுடன் எட்டிய ஒரு சிறு கடல். கடலுடன் அது கலக்குமிடத்தில் அலைகளின் வரிசை நுரை நுரையாக ஒரு வெண்கோடுபோல் தெரிந்தது. அந்தக் கோடுகளைப் பிளந்து ஆங்காங்கே பெரிய, சிறிய கலங்கள் ஒன்றிரண்டு பலர் கண்களுக்குப் புலனாயின-வானவனேந்தல் அப்போது நிலை மையை உய்த்துணர்ந்தான்! ஆம், அவை சோழக்கடற்படை வரிசைகள். பாண்டி நாட்டுப் போரில் குதிப்பதற்கு முன் அவை பாண்டி நாட்டில் அட்டூழிய ஆட்சி செய்த சிங்களவர்களை அவர்கள் தாயகத்திலிருந்து துண்டித்து அவர்களை முற்றுகை யிட முனைந்திருந்தது. இலங்கையிலிருந்து படையுதவியும் சிங்களப் படைகளின் பிடி தளர்ந்துவிடுவது உறுதி என்று சோழநாட்டு அமைச்சர்கள் எண்ணியிருந்தனர். இதற்குமேல் நேரடி உதவி செய்ய அவர்கள் அன்று உடனடித் தயாராயில்லை.
தொலைவில் கலங்களிலே பதித்திருந்த வானவனேந்தலின் கருத்து எதிர்பாராது அருகே திரும்ப நேர்ந்தது. துறையில் விளையாட்டுகள் அழிந்து கொலைக்கள அமளியாக மாறிற்று.
புனல் விளையாட்டில் ஈடுபட்டவர்களிலும் மிகப் பலர் உண்மையில் விளையாட அங்கு வரவில்லை. ஆடவரில் பலரும்