கன்னியின் சோதனை
[207
பெண்டிரில் சிலரும் அதைச் சாக்காகக் கொண்டு, மெல்ல மெல்ல ஒருவரை ஒருவர் தாண்டி ஏரியில் நீந்திச் சென்றனர். தற்செயலாக அவர்கள் சென்ற திசை கடல் ஏரியுடன் கலக்கும் திசையாக அமைந்தது. அத்திசையில் அவர்கள் குறிப்பிட்ட ஒரு எல்லை அணுகியதும், கரையிலுள்ள அசையா உருவங்கள் திரும்ப உயிர்பெற்றன. வேல்கள் பாய்ந்தன. அம்புகள் நீரைக் கிழித்துச் சென்றன. உருவிய வாளுடன் பலர் ஏரியையே பிளந்துவிடுவது போலப் பாய்ந்து சென்றனர். அடுத்த கணம் முன்னேறியவர்களுள் ஒருவன் ‘ஆ, ஐயோ!' என்று கூவினான். 'கொல்லு! வெட்டு!' என்ற கூக்குரல் ஒன்றும், செத்தோம்! பிழைத்தோம்!கொலைபாதகர்கள்! கொடிய வேட்டை நாய்கள்!’ என்ற கதறல் மற்றொரு புறமாக ஏரிப் புறத்தில் கேட்டது. கருங்குருதி சோர ஒன்றிரண்டு புனல் விளையாட்டாளர்களின் உடல்கள் குற்றுயிருடன் கரைக்கு இழுத்து வரப்பட்டன.
கன்னியின் கண் வழியே வழி செலுத்தி, இக்காட்சிகள் மூலமே அவள் உள்ளத்தில் அலைபாய்ந்த எண்ணப் புயல்களைப் பேரளவு ஊகித்துணர்ந்தான் வானவனேந்தல். அவனுக்கு அக்காட்சியில் புரியாதது ஒன்றே ஒன்றுதான்- புனல் விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தவர்கள் எதற்காகத் திடீரெனக் கடலின் பக்கம் திரும்பினர்? காவல் காத்த சிங்கள ஒற்றர் படைகள் அவர்களை ஏன் தாக்கின? இவற்றைப் பற்றி மட்டும் அவன் மெல்லப் பேச்செடுக்க எண்ணினான்.
அவன் கருத்தை அவள் குறிப்பால் அறிந்து கொண்டாள். ஆனால் அப்போதும் வாய்பேசத் துணியவில்லை. பின் ஒரு சில சொற்களில் அவள் நிலைமையை விளக்கினாள்.
'இந்த நாட்டில் இப்போது வாழ்வு இல்லை. வேறு நாடு சென்றால் வாழலாம். அதோ அந்தக் கப்பல்களில் சென்று இடம் பெற்றுவிட்டாலும் நம்பிக்கை உண்டு. இதைத்தான் இன்று பாண்டி நாட்டு மக்கள் எண்ணுகின்றனர். பாடத்துக்கோ, நேரத்துக்கோ, விளையாட்டுக்கோ அவர்களுக்கு நேரமில்லை!" என்று அவள் சுருக்கமாகக் கூறினாள்.
அவன் அவளைப் பின்னும் தொடர்ந்து சுற்றினான். அவன் நிலை பின்னும் மாறவில்லை. ஆனால் அவன் உள்ளம் இப்போது