பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கன்னியின் சோதனை

[209

"நான் செல்லும் திசைவேறு; நீ செல்லும் திசை வேறு வானி! நான் பெண்தான். ஆனால் இந்நாட்டை விட்டு எப்படியும் தப்பிச் செல்ல நான் துணிந்து விட்டேன். நீ என்னுடன் வருவதானால் வரலாம். ஆனால் வர அஞ்சினால் வரவேண்டாம். கோழைகளுடன் இங்கிருந்து செத்த வாழ்வு வாழ்வதை விடக் கடலலைகளிடையே குருதி சிந்தி வீரமாக மாள்வது மேலானது என்று கருதுகிறேன்,” என்றாள் அவள்.

“நான் கோழை என்று நினைக்கிறாயா?" என்று தழுதழுத்த குரலில் கேட்டான் அவன்.

"அவ்வாறு யார் சொன்னது? உன் வீரம் விடுதலையை நோக்கினால், நாம் ஒரு வழிசெல்லலாம். இல்லையானால் இன்றே இப்போதே, இங்கேயே பிரியலாம்!” என்றாள் அவள்.

கூறிய சொல்லுக்கு எதிர்சொல் கூற அவனுக்கு வாய்ப்பில்லை. அவள் அருகே நின்ற படைவீரர் வரிசையை எப்படியோ துளைத்துக் கொண்டு மறுபுறம் மறைந்தாள்.

வானவனேந்தலால் படைவீரர் வரிசையை அதே வகையில் திடுமெனத் துளைத்துச் செல்ல முடியவில்லை. படை வீரர் அவனைத் தடுத்து நிறுத்தினர். படைத்தலைவர் பலருடன் கைகலந்து சிங்களப் படை நாயகன் இலங்காபுரன் முன்னேயே சென்று அவன் தன் நிலையை விளக்கி வாதாட வேண்டி வந்தது. அவர்கள் கேள்வி. எதிர்க் கேள்விகளுக்குத் தகுந்த விளக்கம் கூறித் தப்புவதற்குநாட்கள் சில பல சென்றன. அதன் பின் வேண்மாளைத் தேடிப் பிடிப்பது இன்னும் அரும் பெருங்காரியமாய் அமைந்தது. அவன் பித்தன் போல அலைந்தான்.

ரு கணம் அவள் மீதும் அவன் கோபத்தால்-சீறினான். மறுகணம் அவள் பாச அலைகளில் மிதந்து தத்தளித்தான். அவளை வெறுத்துத் தள்ளி விட்டு வாழ்வதாகக்கூடத் தனக்குள் உறுதி கூறிக் கொண்டான். அவளைத் தேடுவதில்லை என்று அடிக்கடி சூளுரைத்துக் கொண்டான். ஆனால் அதே சமயம் அவன் கால்கள் அவனையறியாமலே அவளைத் தேடிக் கொண்டு சென்றன.

இறுதியாக ஒரு நாள், முன்னிரவு நேரம்! அன்று முழு நிலா