(210)
அப்பாத்துரையம் - 28
ல்லை. மூன்றாம் பிறை அப்போதுதான் ஏரி மீது தோன்றியிருந்தது. அந்த அரை இருட்டுடன் அரை இருட்டாக, ஒரு குத்துக் கல்லுடன் குத்துக்கல்லாக அவள் உருவம் அமர்ந்திருந்தது. அருகே சென்ற பின்தான் வானவனேந்தல் அவள் பக்கம் நோக்கினான். அவனை அறியாமல் அவன் உடலில் ஒரு மின் அலை பாய்ந்தது. அதே சமயம் அவள் தற்செயலாக அங்கே வந்து நிற்கவில்லை; அவனை ஆவலுடன் எதிர்பார்த்தே வந்திருக்க வேண்டும் என்று ஏதோ ஒன்று அவன் அகச் செவிகளில் வந்து கூறிற்று.
அவள் முகம் முற்றிலும் வாடியே இருந்தது. ஆனால் அவனைக் கண்டவுடனே அதில் ஒரு மின் ஒளி தோன்றி மறைவது போல் இருந்தது.
'உன்னிடம் விடை கொள்ளாமல் போக மனமில்லை, வானி! அதற்காகத்தான் காத்தலைந்தேன், நாட்கணக்காக, இன்று கூடக் காத்திருந்தேன். மணிக்கணக்காக, இப்போது கண்டுவிட்டேன். இனி விடை பெற்றுக் கொள்கிறேன். போய் வருகிறேன்." என்றாள் அவள்.
சொல்லின் பொருள் அவனுக்குப் புலப்படுமுன் மங்கை சரேலென்று ஏரியில் குதித்தாள். அவள் உடல் நீருடன் நீராக மறைந்தது.
மல்லாந்து மிதந்தும், கைகால்களை வீசியும் அம்பு வேகத்தில் அவள் நீந்திச் சென்றான். அவள் செல்லும் திசையை நீரில் கலங்கிய ஒளி நிழல் வண்ணமும், நீர் குமிழியிடும் அரவமும் தான் காட்டின.
அவன் ஒரு சில கணங்களே திகைத்து நின்றான். அடுத்த சில கணங்களில் அவனும் அவள் சென்ற திசையிலே நீரில் குதித்து விரைந்தான்.
இரவின் அமைதியில் நீரில் இருவரும் கிட்டத்தட்ட அருகருகே சற்று முன்பின் மிதந்து முழுமூச்சுடன் நீந்தினர் ஆனால் அவர்கள் போக்கு அப்படியே தடையற்ற போக்காக இருந்துவிடவில்லை. முன்னாள் குளிக்கும், துறையில் அவர்கள் கண்ட காட்சிக்கு அவர்கள் விரைந்து ஆட்பட நேர்ந்தது. எங்கிருந்தோ தருவைக் கரை எங்கும் திடீரென்று உயிர் பெற்றது.